கவிதைகள்
பெருமை!… ( கவிதை )… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
சான்றோனாய் தனயன் வந்தால்
தந்தைக்கு நற் பெருமை
தலைவனாய் பிள்ளை வந்தால்
தாய்க்கு நற் பெருமை
சான் றாண்மை யோடிருப்பின்
சகல ருக்கும் பெருமை
சரித்திரத் திரத்தில் நிற்பதே
சாதிப் பார் பெருமை
ஓயாமல் உழைத்து நின்றால்
உழைப் புக்கே பெருமை
உலகுக்கு உதவி விடின்
உயர்திடும் உன் பெருமை
வீழாமல் இருந்து விடின்
வீரத் துக்கே பெருமை
வாழ் நாளை வளமாக்கு
வாழ்வுதரும் நல் பெருமை 
கோவில் சென்று வழிபட்டால்
குலத்திற்கு நற் பெருமை
குணமுள்ளார் அருகு இருப்பின்
குடும்பத்திற்கே நற் பெருமை
பீடுபெற்று வாழ வேண்டின்
பேணிவிடு நற் பெருமை
நாடுபோற்ற நிற்க வேண்டில்
தேடிவிடு நற் பெருமை
![]()