கதைகள்
விடுகதை!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

மகன் தந்தையிடம்,
“அப்பா, நாம் மறைவில் செய்வதை வெளிப்படையகவும்
வெளிப்படையாக செய்வதை
மறைவிலும் செய்பவர் யார்? எங்கே?”என்று விடுகதை போட்டான்.
அதற்கு தந்தை,
“நாம் மறைவாக குளிக்கிறோம்
கடவுள் கோவிலில்
வெளிப்படையாக குளிக்கிறார். நாம் வெளிப்படையாக உண்கிறோம், அவர் திரை மறைவில் உண்கிறார்.” என்று பதிலளித்தார்.
“மிகவும் சரி” என்றான் மகன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()