கதைகள்

ராகிணி!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

பெரியவர் இன்னும் சில நாட்களே உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் விவாதித்துக்
கொண்டிருந்தபோது,

“ராகிணி, ராகிணி” என்றார் பெரியவர்.

உடனே தாதி வெளியேநின்ற பெரியவரின் மகனை அழைத்துவர அவர் மகனிடம்,

“ராகிணியை பெண் பாரர்த்து
சென்றார்களே, என்ன ஆயிற்று?” என்றார்.

“திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது”

அதைக் கேட்டதும் பெரியவர்
நிம்மதியாய் சிவபதம் அடைந்தார். ராகிணி யாரென்றால் மாலை ஏழு மணி
சீரியலில் வரும் கதாநாயகி.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *