கட்டுரைகள்

கொரொனா எனும் அரிதட்டு!…. ஏலையா க.முருகதாசன்.

இக்கட்டுரை உயிர்க்கொல்லி நுண்கிருமியான கொரொனா பற்றிய எனது மூன்றாவது கட்டுரையாகும்.

இவ்வுயிர்க்கொல்லி நுண்கிருமி, எந்தெந்த வயதில் உள்ளவர்களை,நோய்க்குள்ளானவர்களை தொற்றுகின்றது அமைய அரிதட்டு செயல்பாட்டுடன் ஒப்பிட்டு கட்டுரையைத் தொடர்ந்துள்ளேன்.

முதலாவது பதிவை பலர் கண்ணோட்டம் விட்டிருந்தார்கள்.அரிதட்டை,கொரொனொவுடன் ஒப்பீடு செய்து கொள்வதற்கு அரிதட்டின் வேலை எதுவோ கிட்டத்தட்ட அதற்கமைவாகத்தான் கொரொனா செயல்படுகின்றது.

அதற்கு முன்னதாக நான் வேலை செய்த தொழிற்சாலையின் அரிதட்டு முறையை விளக்குகிறேன்.நான் வேலை செய்த தொழிற்சாலையின் தொழில் காய்கறிகளைப் பதப்படுத்துவதாகும்.

அக்காய்கறிகளில் முக்கிய பங்கு வகிப்பது வெள்ளரிக்காய்.இலங்கையில் அதற்கு கெக்கரிக்காய் என்றும் பெயர் உண்டு.தோட்டக்காரர்கள, தமது தோட்டத்திலிருந்து பெரிதும் சிறிதுமாக பலதரப்பட்ட அளவுகளில் தமது றக்ரர் பெட்டிகளில் கொண்டு வந்து பெல்டில் கொட்ட,அவை ஒவ்வொரு அளவுகளில் உள்ள அரித்தட்டு பெல்டுகளில் விழ அந்தந்த அளவுகளில் உள்ள வெள்ளரிக்காய்கள் ஒவ்வொரு பெட்டிகளில் நிரப்பபப்பட்டு அவை துப்பரவு செய்யப்பட்டு போத்தல்களில் அடைக்கப்படும்.

இங்கே முக்கியமாக அரிதட்டு முறைதான் கவனிக்கப்பட வேண்டியது. நனைய விட்டு,நனைந்ததன் காயவிட்டு, உரலில் இடிக்கும் அரிசியைப் போன்றும், மிளகாய் கோப்பி போன்றவற்றை கவனித்தால் இடித்து எடுத்து பின்னரையில்(அரிதட்டு) போட்டு அரித்தெடுத்ததை பிறகு இடிக்கப் போட்டு, பிறகு அதை பின்னரையில் அரித்தெடுப்பதும், பிறகு சேர்ந்ததை பிறகு திருப்பி அனைத்தையும் அரிக்கும் போது அதில் கட்டைகள் வரும் அதனையும் ஒருமுறை இடித்துப் பார்த்து இனிச்சரிவராது என்ற தீர்மானத்துடன் மிகுதியான கட்டைகளைக் கொட்டுவார்கள்.

வெள்ளரிக்காய் அரித்தட்டு முறையையும், உரலில் இடித்த பொருட்களின் அரிதட்டு முறையையும் கொரொனோவுடன் ஒப்பிட்டால் அதனை அரித்தட்டு முறைக்கு ஒப்பிட முடியும்.

முதல் அலையில் கொரொனா அதிகளவாக எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும்,தொடர்ச்சியாக தீராத நோய்களில் பீடிக்கப்பட்டவர்களையும் பற்றிப் பிடித்து இறப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது

கொரொனா நுண்கிருமித் தொற்றுக்குள்ளானவர்கள் பலதரப்பட்ட வயதுடையவர்களாக இருந்த போதிலும், உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் இளம் வயதினரும் கொரொனோ நுண்கிருமித் தாக்கத்திலிருந்து சுகம்

அடைந்து வருகிறார்கள்.

இனிச் சகஜ வாழ்க்கைக்கு மக்களை அனுமதித்துள்ள இன்றைய நிலையில் அடுத்த கொரொனா அலையில் சிக்கி அரிதட்டு முறையில் அரித்தெடுக்கப்படுபவர்கள் எந்நிலைக்குட்பட்டவர்கள் என்பது இனித்தான் தெரிய வரும்.

இந்நுண்கிருமி சீனாவிலிருந்து பரவிய காலத்திலிருந்து உலக அனைத்து ஊடகங்களிலும் இது பற்றிய செய்தியே முதன்மை வகித்து வருகின்றன.

அரசு சார்பான ஊடகங்கள்,அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி அவரவர் வலைத்தள காணொளிகள், நாட்டு வைத்தியர்கள், சித்த வைத்தியர்கள், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரச அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கழகங்கள், நுண்கிருமிக் ஆய்வுகூடங்கள், நுண்கிருமியின் தொழிற்பாடுகள் பற்றிய புலமை உள்ள அத்துறைசார் அறிஞர்கள் இவர்களோடு ஆர்வலர்கள் எனப் பலவிதமானவர்களிடமிருந்து இக்கிருமியின் தொற்று பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் வகைதொகையாகச் செய்திகள் மனிதகுலத்தை வந்தடைந்தவண்ணமே இருக்கின்றன.

கொரனா அல்லது கோவிட்-19 என்ற இந்த நுண்கிருமி பரவக் காரணம் வுகான் மாகாணத்தில் உள்ள காட்டு விலங்குகளின் இறைச்சிகளை விற்பனை செய்த சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பாம்பு இறைச்சியைச் சாப்பிட்டவரால் பரவியது என ஒரு செய்தி நம்பும்படி வேகமாகப் பரவியது.

இயல்பாகவே உயிர்க்கொல்லி நுண்கிருமியைக் கொண்டுள்ள வவ்வாலைச் சாப்பிட்ட ஒருவகைப் பாம்பின் இறைச்சியே இதற்குக் காரணம் என்ற சீனாவின் செய்தியை மெய்ப்பிப்பது போல,இத்தொற்றுக்குள்ளான சீன மக்கள் திடீர் திடீர் என மயங்கிவிழத் தொடங்கினர்.சீனாவில் ஒரு புதுவகையான நுண்கிருமி மக்களைத் தொற்றி வருகின்றது என்பதை அங்குள்ள முக்கியமான மருத்துவர்கள் அறிந்து கொண்டு எச்சரிக்கையும் செய்தனர்.

இவ்வுயிர்க் கொல்லிக் கிருமி தமது நாட்டோடு நின்றுவிடும், அதைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று சீனா நினைத்திருக்கலாம் என்று நாம் ஒரு நம்பிக்கையின் நிமித்தம் ஒரு கணிப்பீட்டுக்கு வருவதாக வைத்துக் கொண்டு, உலக நாடுகள் அதனை எவ்வாறு நோக்கின என்பதை கவனிப்போமானால், உலகநாடுகள் இக்கிருமி தொடர்பாக சீன அரசிடமிருந்து வந்த தகவலை மையப்படுத்தி உலக நாடுகள் எங்கும் இவ்வுயிர்க் கொல்லிக் கிருமி பரவாது,அதனையும் மீறிப் பரவினாலும் கட்டுப்படுத்தலாம் என்று அவை நம்பின.

ஆனால் எதிர்பார்ப்புகள் தலைகீழாக மாறின.இக்கிருமித் தொற்று ஏற்பட்டால், இருமல், காய்ச்சல், தும்மல் இவ்வுயிர்க் கொல்லியின் தொறு;றுக்கான பொது அறிகுறிகள் என்பவைகூட பொய்யாகின. அறிகுறிகள் எதுவுமே ஒருவரிடம் தென்படாத நிலையிலும் அவருக்கு தொற்று ஏற்பட

வாய்ப்புண்டு என்பது பெரும் அச்சத்தை உருவாக்கியது.

இப்பரபரப்புக்கு மத்தியில் சீனாவை நோக்கி உலகநாடுகளின் மொத்தப் பார்வையும் திரும்பின.இந்நுண்ணுயிர்கஇ கிருமி; சீனாவின் ஆய்வு கூடத்திலிருந்து கசிந்ததுதான் என முதல் தனது சந்தேகத்தை வெளியிட்டவர்,இஸ்ரேல் இராவணுவத்தின் முன்னாள் மருத்துவ ஆய்வாளர்.

அதற்குப் பிறகு அதை மறுத்த,சீனாவின் அரச துறை சார்ந்தவர்களும்,மருத்துவத் துறை சார்ந்தவர்களும் இது அமெரிக்காவின் சதி வேலை.இவ்வுயிர்க் கொல்லி கிருமி பரவுவதற்குக் காரணம் அமெரிக்காவிலிருந்து வந்த பெண் உதைபந்தாட்ட வீரர்களே என்றும் அதில் ஒரு வீராங்கனையைக் குறிப்பிட்டு சீனா குற்றஞ்சாட்டடியது.

ஆனால் அதே வேளை நுண்கிருமி ஆய்வுகூடங்களை அமைத்து, நுண்கிருமிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பல நாடுகள் வெளிக்காட்டிக் கொள்ளாத சந்தேகப் பார்வை சீனாவை நோக்கிப் பார்க்கத் தொடங்கின.

இந்நுண்ணுயிர்க் கிருமியின் அபாயத் தொற்று தெரிந்தும், மனிதரிலிருந்து மனிதர்க்கு பரவக்கூடியதுதான் இந்நுண்ணுயிர்க் கிருமி என்பதை சீனா மறைத்துவிட்டது என்று உலக நாடுகள் நம்பிய போதும், அதுபற்றி அவர்கள் இந்நுண்ணுயிர்க் கிருமியினால் தமது நாட்டுக்குள் ஏற்பட்ட சமாளிக்க முடியாத நிலைமையினால் கோபமான கருத்துக்களையோ ஆக்ரோசமான கருத்துக்களையோ வெளியிடவில்லை.

ஒரு கிருமி மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதாகவிருப்பின் அது மிக வேகமாக பரவக்கூடியதாகவே இருக்கும்.ஏனெனில் மனிதர்களின் சமூக உறவாடலும், நாளாந்தம் அவர்கள் பொதுவெளிகளில் பரவலாக திரியும் தன்மையும் ஒருவருக்கொருவர் மிகக் குறைந்த இடைவெளிகளைக் கொண்டு இருப்பதன் இந்நுண்ணுயிர்க் கிருமியின் தொற்றுதலை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை தோன்றியது.

இந்நுண்ணுயிர்க் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஏற்படும் இருமலைளேயா தும்மலையோ அவர்களுக்கருகில்; நடமாடுபவர்கள்; அது இயல்பாக ஏற்படும் இருமல் தும்மல் என்றுதான் ஒரு காலகட்டம் வரையும் அதனுடைய அபாயத்தை உணராதிருந்தார்கள்;.

இந்நுண்ணுயிர்க் கிருமித் தொற்று வேகமெடுத்ததும் பல்வேறு கணிப்பீடுகள் ஏற்பட்டன.இத்தொற்றுக்கு பின்னாலுள்ள காரணிகள் எவை என ஆராய்ந்த போது அது ஒரு இடத்தில் நிலைத்து நின்றன.

அது சீனாவின் வணிகமும் அதனுடைய ஏற்றுமதித் துறையுமாகும்.இன்று உலகளாவிய ரீதியல் சீனாவின் உற்பத்திகளை உலகநாடுகள் வாங்குவதற்கான காரணங்களாக அவை மலிவான பொருட்கள் என்பது பிரதான காரணமாகின்றன.

ஒரு நாட்டிலுள்ள, மிக வசதியுள்ள மக்கள் தமது வருவாய்க்குத் தக்கதாக வாங்கக்கூடிய பொருளை குறைந்த வருமானமுள்ள மக்களும் அதே பொருளை மிக மலிவான விலைக்கு வாங்கும் நிலையைத் தோற்றவிப்பது.

உதாரணமாக ஒரு பொருளின் விலை 100 யூறோவாக இருந்து அந்தப் பொருளை மிக வசதியானவர்கள் மட்டுமே வாங்கி அனுபவிப்பவர்களாக இருக்கையில், அந்தப் பொருளினால் ஏற்படும் ஒத்த பலனைக் கொடுக்கக்கூடிய ஒரு பொருளை சீனா உற்பத்தி செய்து மலிவான விலையில் விற்பனை செய்யும்.

எல்லா நாடுகளிலும் அங்கு வாழும் மக்களின் வருவாய் ஒரு மாதிரியாக இருப்பதில்லை.எல்லா நாடுகளிலும் மத்தியதர வருமானம் உள்ள மக்களும் அதற்கு கீழே உள்ள மக்களுமே சராசரி சனத்தொகையில் கூடுதலான வீதத்தில் இருப்பார்கள்.

உலக நாடுகளின் சனத்தொகையை கணக்கிட்டு, இச்சனத் தொகையில் வசதியான தாம் நினைத்த வாழ்க்கையை தாம் விரும்பும் பொருட்களை வாங்கி துய்த்துணர்ந்து வாழ்பவர்கள்,அதற்கடுத்தபடியாக வாழ்பவர்கள், அதற்கடுத்தபடியாக வாழ்பவர்கள் எனக் கணக்கிடுகையில் உலக சனத் தொகையில் 10 வீதத்திற்கும் 15 வீதத்திற்கும் உட்பட்டவர்களே வசதியான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள்.மிகுதியாக இருப்பவர்கள் 85 வீதத்தினராவார்கள்.

மேலே குறிப்பிட்டது போல ஒரு பொருளை சீனாவல்லாத ஒரு நாடு 100 யூறோவுக்கு விற்று, பொருள் உற்பத்தியாளர் அதனுடைய பாவனைக் காலம் 10 வருடமாக உத்தரவாதமாக கொடுக்கும் போது,அதே பலனைக் கொடுக்கும் பொருளை சீனா 20 யூறோவுக்கு விற்பனை செய்கிறது.அந்தப் பொருளிற்கான பாவனை உத்தரவாதம் 2 வருடமாக இருக்கும்.

ஆனால் 100 யூறோ பொருள் தரம் மிக்கதாக இருக்கும்.20யூரோ பொருள் தரங்குறைந்ததாக இருப்பினும் அதனின்று பெறப்படும் பலன் ஒன்றாகவே இருக்கும்.

உதாரணத்திற்கு ஒரு வானொலிப் பெட்டியை எடுத்துக் கொண்டால், 100 யூறோவுக்கு வாங்கிய வானொலிப் பெட்டி கொண்டிருக்கும் அலைவரிசைகளை 20 யூறோவுக்கு வாங்கிய வானொலிப் பெட்டியும் கொண்டிருக்கும்.ஆனால் 100 யூறோ வாங்கிய வானொலிப் பெட்டி அதிகளவு அலைவரிசைகளைக் கொண்டிருந்தாலும்,20 யூறோவுக்கு வாங்கியவன் அதைப் பற்றி பெரிதாக கவலைப்பட்டுக் கொள்ள மாட்டான்.

ஏனெனில் 100 யூறோவுக்கு ஒத்த பொருள் தன்னிடம் இருப்பதாக அவன் தன்னை திருப்திப்படுத்திக் கொள்வான்.அது மட்டுமல்லாது 20 யூறோவுக்கு வாங்கிய ஒரு பொருளின் பாவனை உத்தரவாதக் காலம் 2 வருடங்களாக இருக்கும் பட்சத்தில்,அப்பொருள் 2 வருடங்களுக்குள் பழுதடைந்துவிட்டால் பொருள் உற்பத்தியாளன் கொடுத்த பாவனைக்கால உத்தரவாதத்தின்படி வியாபார நிலையத்திடமிருந்து அதே பொருளை பணம் கொடுக்காமல் வாங்கிக் கொள்வான்.

பொருளைப் பாவிப்பவனின் மனநிலையை ஊடறுத்துப் பார்ப்போமானால், அவன் ஒரே முறையில் 100 யூறோவைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவதற்கு அவனுடைய வருவாய் இடம் கொடுக்காது..ஆனால் 20 யூறோ என்பது அவனுக்குப் பாரமாக இருக்காது.

100 யூறோவை ஒரே முறையில் கொடுப்பதைவிட,ஒரு வருடத்துக்கு ஒருமுறை 20 யூறோ கொடுத்து வாங்குவதை அவன் விரும்புவான்.சில வேளைகளில் அப்பொருள் அவனுக்கு தொடர்ச்சியாக தேவைப்படாத போது அப்பொருளை அவன் வாங்காமலும் விட்டுவிடுவான்.

அல்லது அவன் எவ்வித பணமும் கொடுக்காது அப்பொருளை தொடர்சியாக வாங்குவான்.இவ்விற்பனைச் சங்கிலித் தொடரில்,உற்பத்தியாளன் இப்பொருளின் விலையை 15 யூறோவாக குறைத்து ஒரு வியாபார தந்திரத்தை மேற்கொள்வான்.

இனி அந்தப் பொருளை வாங்குவதில்லை என்று முடிவெடுத்தவனின் மனநிலையை 15யூறோ என்ற விலை மாற்றியமைத்துவிடும்.அது மட்டுமல்லாமல் பொருளின் வடிவமைப்பும் அழகும் வாங்குபவனைக் கவர்ந்துவிடும்.பொருட்களை அழகாக வடிவமைப்பதில் யப்பானும் சீளனாவும் முன்னணி வகிக்கின்றன.

பணக்கார நாடுகளால் ஒரு பொருளை மலிவுவிலையில் விற்கக்கூடியதாக தயாரிக்க இயலாது.தமது நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் சம்பளத்திற்கு ஏற்றவாறே தயாரித்த பொருட்களினந் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.அதனால்தான் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாகவும் உதாரணமாகவும் ஜேர்மனியை எடுத்துக் கொணடால், ஐரோப்பாவிலுள்ள குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் தமது கார்களை உற்பத்தி செய்கின்றன.

ஆனால் அதே வேளை, உற்பத்தி செய்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கான சம்பளத்தையோ வரி போன்றவற்றையோ இறக்குமதி செய்கின்ற செலவீனத்தையோ கணக்கிட்டு தமது தாயரிப்புகளை விற்பனை செய்வது இல்லை.

எனவே பல்வேறு பொருட்களை தயாரித்து அவற்றை குறைந்த விலையில் விற்பதன் மூலம் உலக நாடுகளின் 85 வீதமான மக்களை தனது வணிக வலையமைப்புக்குள் வைத்திருக்கும் நாடுகளில் சீனா மிக மிக வேகமாக முன்னேறி வருகின்றது.

தனது பல்வேறு வணிக, பொருளாதார, நிதி கட்டமைப்புக்களை, அந்தந்த நாட்டின் பொருளாதார வருவாய்க்கு ஏற்ற விதத்தில் அணுகி வருகின்றது.

ஒரு வணிக ஏற்றுமதிப் போரை முழுவீச்சில் சீனா கையாண்டு வருகிறது.அவசரம் அவசரமாக அள்ளித் தெளித்த வேலையாக சீனா இந்த வணிக ஆக்கிரமிப்பைச் செய்யவில்லை.

மிக மிகத் தெளிவான தூரநோக்குச் சிந்தனையுடன் உலகை வணிகத்தினால் வளைத்துப் போடுவதில் சீனா

நிதானம் தவறாது முன்னேறி வருகின்றது.

சீனாவின் உற்பத்திப் பொருட்களே இல்லாத நாடுகள் இல்லை என்னுமளவிற்கு பல நாடுகளில், சீனாவின் பல்வேறுபட்ட பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்து நிற்கின்றன.

சமாந்தரமாக இரண்டு விதமான அணுகுமுறையை சீனா கையாண்டு வருகின்றது.உலகிலேயே அதிகளவு சனத் தெகையைக் கொண்ட தனது நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்புக்காக ஏற்றுமதி மூலமும் வருவாயை ஈட்டுதலும்,தனது ஏற்றுமதி மூலம் மற்றைய நாடுகளின் ஏற்றுமதிகளை தடுத்து நிறுத்துவதுமாகும்.

கொரொனா தொற்றுக் காரணமாக அனைத்து நாடுகளிலும் பாரதூரமான பொருளாதாரச் சரிவுகளும்,தொழிற்சாலைகள் முடக்கப்பட்ட நிலையினாலும், பல்வேறு தொழில்துறைகள் இயங்கா நிலையினாலும், வேலையின்மை ஏற்பட்டு, வாழ்க்கைக்கான வருமானமற்று ஒவ்வொரு நாடும் தூக்க முடியாத பொருளாதாரச் சுமைகளை தூக்கி வருகின்றன.

தனது வணிக முற்றுகைக்கு கொரொனா நுண்கிருமியை சீனா பயன்படுத்தியதா என்ற கேள்வியும், சந்தேகமும் சாதாரண மனிதர்களிலிருந்து நாடுகளின் தலைவர்கள், பல்வேறு துறைசார் அறிவியலாளர்கள்,மருத்துவத்துறை சார்ந்தவர்கள்,ஊடகவியலாளர்கள் வரை கொண்டிருக்கிறார்கள் என்பதை நிராகரித்து விட முடியாது.

மருத்துவத்துறையிலும்,நுண்கிருமி ஆய்விலும் உச்சத்திலிருக்கும் நாடுகளாலேயே இதுவரை தி;ட்டவட்டமான தடுப்பூசியையோ மருந்தையோ தொடர்ச்சியாக முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நுணணுயிர்க்கிருமி, தனது தோற்றத்தைக்கூட மாற்றி வருவதாகவும் அப்பப்ப செய்திகள் வருகின்றன.இதுவரையில் உலகத்தினால் கண்டறியப்பட்ட நுணணுயிர்க்;கிருமிகள் வெளியே வாழும் காலம் சில விநாடிப் பொழுதுகளாக இருக்கும் போது, கொரொனா நுண:ணுயிர்க்; கிருமி வெளியே வாழும் காலம் நிமிடக் கணக்கிலிருந்து மணித்தியாலங்களாக நீடித்து நிற்கின்றது.

இங்குதான் சந்தேகம் வலுக்கின்றது, இந்நுண்கிருமியை அழிப்பதற்கு உடனடியாக மருந்துகளோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்க முடியாதவாறு, பல ஆண்டுகளாக பல கட்ட ஆய்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு நாடுகளின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்வதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்பது.

நுண்கிருமிகளை உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுமானால், உருவாக்கலாம் என்ற பதில் உண்டு.மனிதரல்லாத மற்றைய உயிரினங்களான பறவைகள், விலங்குகள்,பூச்சி வகைகள்,ஊர்வன வகைகள் என மிகவும் கொடிய உயிர்க்கொல்லி நுண்கிருமிகள் உண்டு.

இந்நுண்கிருமிகள், எந்தெந்த உயிரினங்களில் இருக்கின்றனவோ, அந்தந்த உயிரினங்களுக்கு

பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மனிதர்களுக்கு அவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.

இத்தகு நுண்கிருமிகளை அழிக்க முடியாதளவிற்கு பலம் கொணடவையாக உயிரியல் ஆய்வு கூடங்களால் உருவாக்க முடியுமென்றால் அதுவும் முடியும்.

விஞ்ஞானத்தினால்; இயற்கையை வெல்ல முடியாதெனினும்,விஞ்ஞானத்தால் சாதிக்கவும் முடியும்.எனவே கொரொனா நுண்ணுயிர்க் கிருமியையும் பலகட்ட ஆய்வுகளுக்கூடாக உருவாக்கியிருக்க ஏன் முடியாது என்ற கேள்வி பல நாடுகளிடம் இருக்கின்றது.

சீனா ஒரு பெரும் வல்லரசாக வளர்ந்துவரும் நாடு என்பதை புறந்தள்ள முடியாது.கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் சீன இந்தியப் போர் நடந்த போது, சீனா சொல்லியதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது.எமது மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரு அடி உயரத்திற்கு எம்பிக் குதித்தோமானால் இந்தியாவை கடல் மேவிவிடும் என்று சீனா சொல்லியிருந்தது.

இதே போல அன்று இரும்புத்திரை நாடு என்று வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஸ்யாவின் அதிபரான இரும்பு மனிதனான குருசோவ் என்னை வெளிநாடொன்றில் வைத்துக் கொல்ல யாராவது முயற்சித்தால், என்னைச்சுற்றியுள்ள ஒரு கிலோ மீற்றர் சுற்றளவு முற்றாக அழிந்துவிடும் என்று எச்சரித்திருந்தார்.

இரண்டு நாடுகளினதும் இந்த எச்சரிப்பானது, அவரவர்களின் வல்லாதிக்கத் தன்மையையே காட்டுகின்றது.

கொரொனா தொற்றுக்கு முழுக்க முழுக்க சீனாதான் காரணமெனில், சீனாவுக்குத் தக்க பாடம் படிப்பிக்கப்படும் என அமெரிக்க அதிபரான டொனால்ட் ரம்ப் சொல்லியதன்பின் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

ஒரு நாட்டினுடைய அதிமுக்கியமான வளமே ஆரோக்கியமான மனித வளமேயாகும்.இப்பொழுது எல்லா நாடுகளும் கொரொனா நுண்ணுயிர்க் கிருமியின் தொற்றால் நலிந்து போய் நிற்கின்றன.இந்த நலிந்த நிலையில் சில நாடுகள் உற்பத்தித் துறையில் வீழ்ச்சியடையுமானால், அந்த உற்பத்திப் பொருளை சீனா உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடலாம், அது சாத்தியப்படவும் கூடும்.

கொரொனா உயிர்க்கொல்லிக் கிருமியின் தொற்று, தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருப்பதால் அரிதட்டு நடைமுறை தொடரவேஅதிக வாய்ப்புண்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button