கதைகள்

கடத்தல்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

ஒருவனது மனைவியை கடத்தி விட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு அருகிலுள்ள இராமர் கோவிலில் மனமுருகி வேண்டவே இராமர் எதிரே தோன்றி,

“என்ன வேண்டும் பக்தா” என்றார்.

பக்தனும் நடந்ததை விபரமாகச் சொல்ல அதற்கு இராமர்,

“பக்தா, இரண்டு தெரு தாண்டி அனுமார் கோவில் இருக்கிறது. அங்கே செல், எனக்கே அவர்தான் சீதையைக் கண்டுபிடித்து சொன்னார்” என்று கூறி மறைந்தார்.

-சங்கர சுப்பிரமணியன்.

நன்றி: சன் டி. வி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *