கதைகள்
எப்போது திருமணம் நடக்கும்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

ஜோசியரிடம் மகள் ஜாதகத்தை எடுத்துச்சென்ற பெற்றோர் எப்போது திருமணம் நடக்கும் என்று கேட்க அதற்கு அவர்,
“இன்னும் ஒன்றரை வருடத்தில் கட்டாயம் நடக்கும். ஆனால் அதற்குள் நடக்கும் முதல் இரண்டு திருமணங்கள் நிலைக்காது. மூன்றாவது தாலிதான் நிலைக்கும். கவலைப்பட வேண்டாம்” என்றார்.
அதேபோல் மூன்றாவது தாலிதான் நிலைத்தது. முதல் இரண்டு தாலிகளும் அவள் நடித்த வெவ்வேறு சீரியல்களில் கட்டப்பட்டன. மூன்றாவது தாலி
உண்மையான திருமணத்தில் கட்டப்பட்டது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()