கதைகள்
அப்பா! நீங்கள் சொல்வது சரிதான்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை
அப்பா! நீங்கள் சொல்வது சரிதான்!
கனகரத்தினம் குடிச்சுப் போட்டு தெருவுக்கு தெரு விழுந்து கிடப்பார்.
பிள்ளைகள் அவரின் போதை தெளிவித்து உணவு குடுத்து,
“அப்பா இனிமேல் எங்கட மானத்தை வாங்காதையுங்கோ” என்பார்கள்.
“என்ரை நாலு பிள்ளையளையும் படிப்பிச்சு நல்ல பண்புகளோடு வளர்த்து விட்டிருக்கிறன். எனக்கு நீங்கள் அறிவுரை சொல்ல வேண்டாம்” தந்தையார் சொல்ல,
”அதாலைதான் நீங்கள் என்ன கூத்தாடினாலும் நாங்கள் உங்களை வடிவாகப் பாக்கிறம்” என்றார்கள் பிள்ளைகள்.
![]()