கதைகள்

சுத்திக் காட்டுறார்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை)

சுத்திக் காட்டுறார்!

நம்மவர்கள் போட்டிக்கு வீடு கட்டுவது ஒன்றும் புதுமை அல்ல.

சுந்தரலிங்கம் தம்பதியினர், தமது நண்பர் முரளிக்கு தமது புது வீட்டைச் சுற்றிக் காண்பித்தார்கள்.

முரளியின் மகன், சுந்தரலிங்கத்தின் மகளைக் காதலிக்கின்றான். அது எல்லோருக்கும் தெரியும்.

“ம்…. என்னுடைய மகன்ரை வீட்டை எனக்கே சுத்திக் காட்டினம்” தனக்குள் கறுவிக் கொண்டார் முரளி.

நன்றி: வெற்றிமணி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *