கதைகள்

அலங்காரம் அந்தரங்கமானது!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

அலங்காரம் அந்தரங்கமானது!

இன்று சீக்கிரமாகவே வேலையிடத்திற்கு வந்துவிட்டேன். பாத்றூமைத் திறந்து நுழைந்தேன்.

“பிரியா கெற் அவுற்” பேனாவால் இமைகளைக் கீறியபடி மொட்டந்தலையுடன் நின்ற மேலதிகாரி கத்தினார்.

இதுநாள்வரை அவரை அழகான அன்பான பெண்மணியாகவே சந்தித்திருந்தேன்.

அன்று முழுவதும் கடுமையான வேலைகள் தந்தார். அழ வைத்தார். வேலை முடிந்ததும் என்னைத் தனியாகச் சந்தித்தார்.

தன்னை அந்த நிலையில் பார்த்ததை, நான் யாருக்கும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார்.

நன்றி: வெற்றிமணி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *