கதைகள்
ஏன் வரவில்லை?… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை)
ஏன் வரவில்லை?
சதாசிவம், மகன் சதீஷின் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை அனுப்பிக் கொண்டிருந்தார். முகவரி இல்லாதவர்களைத் தொடர்பு கொண்டார்.
நண்பன் சாந்தனிற்கு ரெலிபோன் செய்தார். ரெலிபோனில் ‘றிங்’ ஓசையுடன் ‘டொக்’ என்ற சத்தம் கேட்டது.
“உவங்களுக்கு எப்பவும் ஊர் சுத்துறதுதான் வேலை” கோபத்தில் கத்தினார்.
எப்படியோ சாந்தனுக்கும் அழைப்பிதழ் அனுப்பினான் சதீஷ்.
”சதீஷ்… ஏன்ராப்பா சாந்தன் திருமணத்திற்கு வரவில்லை?”
“அப்பா… அவங்கட ஆன்சர்போனிலை நீங்கள் என்னத்தைப் பதிஞ்சனியள்?”
சதாசிவத்திற்கு ‘டொக்’ சத்தம் ஞாபகத்திற்கு வந்தது.
நன்றி: வெற்றிமணி ![]()
![]()