Featureநேசம் நாடும் நெஞ்சங்கள்

சிம்பியோசபி கல்வி மேம்பாட்டு நிறுவனத்தினால் காரைதீவில் வருமானம் அற்றோருக்கு நிவாரணம்!

காரைதீவில் வருமானம் அற்றோருக்கு நிவாரணம்
             – தமிழர் ஊடக மையம் நடவடிக்கை –

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சிம்பியோசபி கல்வி மேம்பாட்டு நிறுவனத்தால் தமிழர் ஊடக மையத்தின் வேண்டுகோளை ஏற்று தற்போதைய கொரோனா தொற்று அச்ச சூழலில் காரைதீவை சேர்ந்த வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இழந்த 35 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொதிகள் செவ்வாய்க்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.

மையத்தின் தலைவர் ரி. தர்மேந்திரா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து சிம்பியோசபி கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஆர். எசான் இவற்றை பயனாளிகளுக்கு கையளித்தார்.
இரு வாரங்களுக்கு முன்பாகவும் தமிழர் ஊடக மையம் கேட்டு கொண்டதன் பேரில் சிம்பியோசபி கல்வி மேம்பாட்டு நிறுவனத்தால் காரைதீவை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *