கதைகள்
தாடிக்கார ஆசாமி!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)
தாடிக்கார ஆசாமி.
தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் பிரவீனா.
ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார்.
தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது பிரவீனா மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து ஒட்டம் எடுத்தார். மயக்கம் தெளிந்ததும்,
“அவரை அடித்து விடாதீர்கள். அவர் எனது முன்னாள் காதலன்” என்றாள் பிரவீனா.
நன்றி : வெற்றிமணி.
![]()