கதைகள்

கார் விபத்திற்கு ஒரு அரிச்சனை!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

( 50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை )

கார் விபத்திற்கு ஒரு அரிச்சனை!

குகநாதன் குடும்பம் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. காரிற்கு பலத்த சேதம். ஆக்களுக்கு ஒன்றும் இல்லை.

கோயில் ஐயருக்கு ரெலிபோன் செய்தி பறந்தது.

“ஐயா! யமன் வந்து எட்டிப் பாத்திட்டுப் போயிருக்கிறார். உடனை ஒரு அருச்சனை செய்து விடுங்கோ. பிறகு சந்திக்கேக்கை காசைத் தாறம். காரின்ரை நம்பரைச் சொல்லிறன். எழுதுங்கோ”

“அந்த நம்பர் வேண்டாம் பிள்ளை. குடும்பம் எண்டு பொதுவாச் செய்யிறன். நீர் கிறடிற் காட் நம்பரைச் சொல்லும்”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *