கதைகள்

நரகத்திற்கு!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

 (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை) 

நரகத்திற்கு!

சிவநாயகத்திற்கு அவுஸ்திரேலியாவில் பல பிள்ளைகள் இருந்தார்கள். இருப்பினும் கடைசி மகன் தினேசுடன்தான் அவருக்குக் கூடுதல் ஒட்டுதல்.

தந்தையர் தினம் வந்தது. தினேஸ் அவரை சினிமாவுக்கு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். இரவு உணவு முடிந்து திரும்புகையில் அவருக்கு குளிருடுப்பு, சப்பாத்து, ‘சிவாஸ் றீகல்’ வாங்கிக் குடுத்தான்.

போத்தல் உள்ளே இறங்க, நாதம் பிறந்தது.

“இதைப் போல ஒவ்வொரு வருஷமும் நீ செய்யாட்டில் நரகத்துக்குத்தான் போவாய்” என்றார் அவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *