கதைகள்
மாமாவும் மருமகளும்!.. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

மாமாவும் மருமகளும்!
(50 சொல்லுக்குள் ஒரு கதை)
குகனும் பவானும் காசிநாதனின் பிள்ளைகள். குகன் மனைவி துளசி.
காசிநாதன் மருமகள் துளசியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு எல்லாமே அவள்தான்.
”பவானுக்கு சீக்கிரம் கலியாணம் சரிவர வேண்டும்” பவானின் திருமணம் நெடுநாட்களாகத் தடைபட்ட கவலை காசிநாதனுக்கு.
“மாமா, உங்கடை தங்கைச்சியைக் கேட்டா ஏதாவது ஒழுங்கு செய்து தருவாவல்லே!”
“குகனைக் கிணத்திலை தள்ளி விழுத்தின மாதிரி, பவானையும் நாசமாக்கிப் போடுவாள் அவள்.”
துளசி திகைத்துப் போனாள்.
![]()
![]()