நல்ல பக்ரீயாக்களை கெட்டவையாக்கும் கைத்தொலைபேசிகள்!.. ஏலையா க.முருகதாசன்.

மேலே உள்ள தலைப்பைப் பார்ப்பவர்களுக்கும், கட்டுரைக்கு உள்ளே நுழைபவர்களுக்கும், நவீன உலகம் எமக்குக் கொடுத்த வரப்பிரசாதம் கைத்தொலைபேசி அதைக் குற்றம் சொல்லலாமா என நினைப்பர்.
உலக மாந்தர்களின் தேவையை,ஆசைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில் அளவுக்குமீறிய செயலிகளை கைத்தொலைபேசி நிறுவனங்கள் புகுத்தி இருந்த இடத்திலேயே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கைத்தொலைபேசிகளைத் தயாரித்து வணிகம் செய்து வருகின்றன.
இருந்த இடத்திலிருந்து அசையாமலிருக்கும் மனிதர்களை இந்த வணிகம் உருவாக்கியது.சோம்பேறித்தனம் மிகுந்த உலக சமுதாயத்தை உருவாக்குவதில் சூழ்ச்சியின் அடிப்படையில் மனிதர்களை மெது மெதுவாக ஒவ்வொரு மனிதனும் தான் நோயாளியாகின்றேன் என்பதை உணராதவாறு நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
ஒரு மனிதன் பெரும் ஆபத்தை நோக்கி நகர்த்தப்படுகிறேன் என்பதை அவனே உணராத நகர்த்தலால் அது சாத்தியப்படுகின்றது.
கைத்தொலைபேசிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இக்கைத்தொலைபேசிகளில் நவீனத்துவத்தை புகுந்துகின்ற தொழில்நுட்பத் தேவைகளையும் அதனைப் பயன்படுத்தப் போவது மனிதர்களே என்ற நிலையில், அத்தொழிற்சாலை வல்லுனர்கள் மனிதர்களின் ஆசைகள் என்னென்ன எதிர்பார்ப்புகள் எவையெவை என ஆய்வுகளை மேற்கொண்டும் அதற்கமைய அத்தேவைகளை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்ற செயலிகளை தொலைபேசிகளில் இணைக்கின்றன.
ஒரு மனிதனை தொடர்ச்சியாக கைத்தொலைNசியின் ஆக்கிரமிப்புக்குள் வைத்திருப்பதன் மூலம் அவனின் உடல் அசைவுகளற்றவனாக்கி விடுகின்றது.
ஒரு மனிதன் உயிர் வாழ தேவைப்படுகின்ற காற்று, நீர், உணவு போன்றவற்றை அவன் பயன்படுத்துகின்ற போது அவை உடலியக்கத்தின் தேவைக்குட்பட்டு அதிலிருந்து மூத்திரம்,மலம், வியர்வை போன்றவை கழிவுகளாக சீராக வெளியேற வேண்டுமெனில் அவனுடைய உடல் வேலை செய்ய வேண்டும் இயங்க வேண்டும்.
வேலை அல்லது பயிற்சிகளை மேற்கொள்ளாத உடல், கழிவுகள் சீராக வெளிறோத நிலையில் நோயுறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
மனித உடல்கள் தொட்டு பூமியில் உள்ள அனைத்துமே வேதியல் பொருட்களாளானவையே.
மனித உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் வேறு வேறு வேதியல் பொருட்களால் ஆக்கப்பட்டவையாகும்.எமது உடலில் உள்ள உறுப்புக்களின் வேதியல் பொருட்களின் தேவைக்கு குறைவு ஏற்படும் போது அந்த உறுப்புக்கள் தமது தேவையைப் பூர்த்தி செய்யும் சமிக்ஞையை நோயாக வெளிப்படுத்துகின்றன.
நோய்க்கான மருந்து என்பது உறுப்புக்களின் வேதியல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுமாகும்.அதே வேளை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகளை எதிர்த்து போராடும் உடலிலுள்ள நல்ல பக்ரீயாக்கள் தோல்வியடையும் போது தீய நுண்கிருமிகளை அழித்தொழிக்கவும் மருந்து உட்கொள்ளப்படுகின்றது.
இத்தொழில்பாட்டில் மனித உடலுக்கு நன்மை செய்யும் பக்ரீயாக்கள் சில வேளைகளில் தீய பக்ரியாக்களாக மாறிவிடுகின்றன.
இன்னும் கொஞ்சம் உடலியக்கத்தைப் பற்றிக் கூர்மையாக சிந்தித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டு போகையில் வேதியல் பொருட்களால் ஆக்கப்பட்ட உடல் ஒரு காந்தப்புலம் கொண்ட சக்தி என்பதும் தெளிவாகின்றது.
இன்றைய நவீன விஞ்ஞானம் பவனத்தின் காந்தப்புலத்தை தனது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றது.ஒரு காலத்தில் கம்பி இணைப்புக்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொலைபேசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.இப்பொழுது மின்காந்த அலைகளுக்கூடாக உலகமே இணைக்கப்பட்டுள்ளது.
எங்கேயோ ஒரு நாட்டிலிருந்து கொண்டு இன்னொரு நாட்டிலிருக்கும் தொழிற்சாலை இயந்திரத்தை கணிணி தொடர்பில் காந்தப்புலம் வழியாக இயக்க முடிகிறது.
கிரகங்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி அவற்றின் திசைகளை தீர்மானித்து கோள்களில் அவை போய்ச் சேர வைப்பதற்கும் காந்தப்புல மின் அலைகளே பயன்படுகின்றன.
இதே காந்தப்புல மின்அலைகள் கைத்தொலைபேசிகள் ஊடாக மனதர்களின் உடலில் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் நல்ல பக்ரீயாக்களைச் சிதை;து நோயுறச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் காலத்தை நோக்கி உலக மாந்தர் வேகமாக நகர்த்தப்படுகின்றனர் அவரறியாதவாறு.
ஒவ்வொரு மனிதனுடைய உடல் ஆரோக்கியமும் ஒருவர் போல ஒருவருக்கிருப்பதில்லை.சிலருக்கு வராத நோய் சிலருக்கு அவரின் உடல் ஆரோக்கியமற்ற தன்மையைப் பொறுத்து அந்நோய் அவர்களுக்கு வர வாய்ப்புண்டு.
காந்தப்புலம் கொண்ட மனித உடலை காந்தப்புல அலைகளால் பாதிப்படைய வைக்கமுடியும் என்பது எதிர்காலத்தில் சாத்தியப்படும்.
இப்பெழுதே நம்மை அறியாமலே நம்மோடு நகமும் சதையும் போல கைத்தொலைபேசிகள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன.கைத்தொலைபேசி பழுதடைந்துவிட்டாலே பைத்தியமாகிவிடுகிறோம்.அந்தளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டோம்.
பொதுவாக ஆண்கள் கைத்தொலைபேசிகளை காற்சட்டைப் பைக்குள்ளே தொடர்ந்து வைத்திருப்பது அவர்களின் விந்து வீரியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்லிவிட்டன.
கைத்தொலைபேசிகள் வழியாகவோ அன்றி வீடுகளில் இருக்கும் கம்பி இணைப்பில்லாத் தொலைபேசிகள் கணிணிகள் வாயிலாக வீடு நிறைய மின்காந்த அலைகள் விரவி நிற்கின்றன.
தொலைக்காட்சிகள்,வானொலிகள், கம்பித் தொடர்பு கொண்ட தொலைபேசிகள் வாயிலாகக்கூட மின்காந்த அலை கசிகிறது எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.
நித்திரையின்மை மன அழுத்தம் போன்றவைக்கு எம்மையறியாமலே மெதுமெதுவாக நாம் உட்பட்டு வருகிறோம்.மனிதனுக்கு இன்றிமையாததாகவிட்ட கைத்தொலைபேசி மின்காந்த அலையோடு மனித உடலின் மின்காந்தப் புலமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நிற்பதை வெளிப்படையாக அதன் அறிகுறிகள் கொண்டு அறிய முடியாதவாறு இருக்கின்றோம்.
எல்லாவற்றையும் கணக்கிட்டு கண்டறிந்து கொண்ட விஞ்ஞான உலகம் மனிதர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள நல்ல பக்ரீயாக்களை மின்காந்த அலைவழியாக கெட்ட பக்ரீயாக்களாக மாற்றி மரணத்தை ஏற்படுத்தும் நிலை வரலாம், அது சாத்தியப்படும்.
இன்று கொரொனா போல நாளை கைத்தொலைபேசிகள் எம்மையறியாமலே எம்முடலைச் சிதைக்கலாம்.அதற்கான ஆய்வுகள்கூட இடம்பெற்றுக் கொண்டிருக்கலாம்.
எனவே கைத்தொலைபேசி என்ற பெயரில் ஒரு பாம்பைக் கையில் வைத்திருக்கிறோம்.அது விசப்பாம்பாக மாறும் காலம் வெகுவிரைவிலாகலாம்.
![]()