கட்டுரைகள்

கரோனாவின் தாக்கமும் சீனாவின் ஆக்கமும்!…. சங்கர சுப்பிரமணியன்.

உலகையே உலுக்கிவரும் கரோனா தொற்றுநோய் பற்றி ஆரம்பக் கட்டத்திலேயே சீனா சரியான தகவலைத் தெரிக்கவில்லை என்றும் எந்த இடத்தில் இந்தோய் தோன்ற ஆரம்பித்தது போன்ற தகவலை சரியாகச் சொல்லவில்லை என்றும் செய்திகள் வலம் வருகின்றன. இனி சீனா இந்நோயை எதிர்த்து போராட என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

உலக மக்களில் ஒன்பது இலட்சம் மக்களுக்கும் மேல் பரவி நாற்பத்திஏழாயிரத்துக்கும்
மேற்பட்ட மக்களை உயிர்ப்பலி வாங்கிய இந்நோயை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது என்று உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. நாற்பத்தி இரண்டாயிரம் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களைக் கொண்டு முந்நூற்று நாற்பது குழுக்களாக அறுபது நாட்கள் இரவுபகலாக இந்நோய்க் கிருமியை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்காக இவர்களை அவர்களது வீட்டிலிருந்தே பிரித்ததோடு இந்நோயை எதிர்த்துப்போராடியதால் நாற்பத்தாறு பேர் இறந்துள்ளதுடன் ஆயிரத்து எழுநூற்று பதினாறு பேருக்கு
இந்நோய் பரவியது.

அதற்கும் மேலாக ஆறுகோடி மக்கள் வாழக்கூடிய ஹுபே மாநிலத்திலுள்ளவர்கள் வெளியேறக்கூடாதென்றும் தடை விதித்தார்கள். அதன் தலைநகரும் கரோனா கிருமியின் பிறப்பிடமுமான
ஒருகோடி மக்களைக் கொண்ட உகான் நகரமக்களை தனிமைப் படுத்தினர். இதை மட்டும்
அவர்கள் செய்திருக்காவிட்டால் இந்நோயால் பாதிப்புற்ற என்பதாயிரம் மக்களை
காப்பாற்றியிருக்கவே முடியாது.

இந்தசம்பவம் 1665ல் இங்கிலாந்தின் தென்கிழக்கு மான்செஸ்டருக்கு அருகிலுள்ள இய்யம் என்ற கிராமத்தில் ஏற்பட்ட கொடிய தொற்றுநோயை நினைவூட்டுகிறது. இந்நோயால் ஆரம்பத்தில் ஊரைவிட்டு வெளியேற நினைத்தவர்களுக்கு
தேவாலய ஊழியர் வில்லியம் என்பவர் ஒரு கருத்தை சொன்னார். ஊரைவிட்டு வெளியேறுவதன் மூலம் மற்ற நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நோய் பரவி
பேரழிவு ஏற்படும் என்றார். அவர் சொன்ன கருத்தின் தன்மையை உணர்ந்த முந்நூற்று ஐம்பது மக்களில் முப்பைத்தைந்து பேரைத்தவிர மீதமுள்ளோர்அக்கிராமத்திலேயே தங்கினர். மீதியுள்ளோரில் இருநூற்றைம்பத்தியொன்பது பேர் அந்நோய்க்கு பலியாயினர்.

இதுதான் இன்று சீனாவில் உகானிலும் ஹுபேயிலும் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த அந்தக் கிராமத்தில் உள்ளவர்களை தியாகிகள் என்றால் சீனாவில் உயிரை விட்டவர்கள் மட்டும் தியாகிகள் இல்லையா என்று சிலர் கேட்கிறார்கள்.

அடுத்ததாக சீன அரசு எடுத்த அவசியமான நடவடிக்கை. இதற்கு முன் வேறு பொருட்களை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலைகள் அனைத்தையும் முகக்கவசத் தயாரிப்பில் ஈடுபடுத்தினர். சீன அரசின் தொழில் மற்றும் தகவல்துறை அமைச்சகத்தின் அறிவிப்புப்படி தற்காப்பு கவச உடையின் உற்பத்தி ஒருநாளில் இரபதாயிரத்திலிருந்து ஐந்து இலட்சத்தை அடைந்தது. போகப்போக இந்த உற்பத்தி
மருத்துவத்துறைக்கான முகக்கவசம் இரண்டு இலட்சத்திலிருந்து பதினாறு இலட்சமாகவும் சாதாரண முகக்கவசம் பத்து கோடியாகவும் உயர்ந்தது.

மூன்றாவதாக ஜனவரி இறுதியில் ஒவ்வொரு மாகாணத்திலும் பெரிய நிகழச்சிகளை எல்லாம் தடை செய்தோடு நெடுந்தூர பேருந்துகளையம் நிறுத்தி சுற்றுலா செல்லக்கூடிய இடங்களை எல்லாம் மூடினர். கொஞ்சம் நிலைமை சீரடைந்ததும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினர். குறைந்த அளவில் நோய்த்தொற்றுள்ள இடங்களில் நோய் வராமல் தடுத்தும் அங்குள்ளவர்களை பாதுகாத்து பழைய நிலைக்கு கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தினர்.

நான்காவதாக, சோதனைக் கருவிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள், நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை தரும் முறைகள் போன்றவற்றில் புதிதாக ஆய்வுகளை முடுக்கிவிட்டனர்.

அடுத்ததாக ரோபோ மற்றும் ட்ரோன்களின் பயன்பாட்டைத் தவிர முகத்தில் தோன்றும் மாற்றத்தை வைத்தே பெரிய கூட்டங்களில் ஒருவருக்க காய்ச்சல் இருக்கிறதா அல்லது வித்தியாசமாக உடலில் வெப்பம் அதிகமுள்ளதா என்பதைக் கண்டறிந்து அத்தகையவர்களைத் தனிமைப் படுத்தி சிகிச்சையளிக்கும் வகையிலும் முன்னேறியிருக்கிறார்கள். சீனாவின் செங்டு பகுதியில் காவல்துறையினருக்கு உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய தலைக்கவசம் வழங்கியுள்ளனர். இந்த தலைக்கவசம் ஐந்து மீட்டர் தொலைவில் ஒருவர் உடல்நிலையில் அதிக வெப்பமிருப்பதைக் கண்டுபிடித்து எச்சரிக்கை மணி அடிக்கும். உடனே அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தி சிகிச்சை கொடுத்தனர்.

இரண்டு மாதங்களாக சீனா கரோனா தொற்றிலிருந்து எப்படி தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும் என்ற
முக்கிய வழிமுறைகளை உலகுக்கு கற்றுத் தந்துள்ளனர். குறிப்பாக முகக்கவசம் அணிவது, அடிக்கடி, கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் அதிகமான கூட்டமுள்ள இடங்களை தவிர்ப்பது போன்றவை இதில் அடக்கமாகும்.

இதுவரை தொற்றுநோயை எப்படி கண்டறிவது அதற்கு எப்படி சிகிச்சையளிப்பது மற்றும் எப்படி தொற்றுநோயை பரவாமல்
தடுப்பது போன்ற அநேக தகவல்களை நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. தவிர அனைத்துலக மற்றும் பிராந்திய அமைப்புகளுக்கும் தகவல் பரிமாற்றம் செய்துள்ளது.

சீனா மீது சந்தேகப்படும்படியான பல குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் நாமும் முன்னேற்பாட்டு நடவடிக்கைளில் ஈடுபடவேண்டும். நம்மை இக் கொடியநோயில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மற்ற நாடுகள் நடத்தும் ஆய்வுடன் இணைந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும்.

இந்த சந்தர்பத்தில் மனிதநேயம்
வேண்டும். கரோனா தொற்றைவிட மிகக்கொடிய இனவிரோத மனப்பான்மையை குறைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தப்பான இனவிரோதத்தை தூண்டும் செய்திகளுக்கு மதிப்பளிக்கக் கூடாது. உதாரணத்திக்கு கரோனா தொற்று நோய்க்குக் காரணமான ஔவால் சூப்பை குடித்து ஒரு சீனப்பெண்மணி மகிழ்வது போன்ற ஒரு காணொளி சமூக வலைத்தளத்தில் வலம் வந்தவண்ணம் உள்ளது. உண்மையில் அந்த காணொலி சீனாவுக்கு வெளியே பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாகும் என்கிறார்
போபெங் ஹு என்ற மூத்த சீன பத்திரிகையாளர்.

இவர் ஒரு செய்தியை பதிவிடுகிறார். முதன்முதலில் காலரா என்ற தொற்றுநோய் 1817-1824க்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றி கல்கத்தாவைத் தாக்க தொடங்கியதாகக் கூறுகிறார். பின் இந்தோய் தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியதரைக்கடல் நாடுகள்வரை பரவி சீனாவையும் சென்றடைந்தது. இத்தகைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய வரலாற்றுப் பின்னணியை தோக்கினால் நாம் வீணான சந்தேகங்களை தவிர்க்கலாம். மேலும்
எல்லோரும் இணைந்து விஞ்ஞான வழிமுறைகள் மூலம் இந்நோயைத் தடுக்க போராட வேண்டும் என்கிறார்.

உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்திய COVID 19
என்ற கரோனா மனித இனத்துக்கே விரோதியாகும். சீனா அரசு கரோனாவை கட்டுப்படுத்துவதை தன்தோளில் சுமந்து முன் உதாரணமாகத் திகழ்கிறது. திட்டவட்டமான முடிவெடுப்பதோடு மற்ற நாடுகளுக்கு மருந்து பொருட்களையும் மருத்துவ குழுக்களையும் அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் சீனா அதனது முன்மாதிரி மருத்துவ அனுபவங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும் பகிர்ந்துள்ளது. சீன அனுபவத்தின் மூலம் இந்நோயை குறைக்கவும் தடுக்கவும் அதனால் முடியும் என்றாலும் அதை
வெளியில் இருந்து வரவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் மட்டும் எப்படி அவ்வளவு இழப்பின்றி இருக்கிறார்கள் என்று யாரும் உங்களை மாறாக சிந்திக்க விடாதீர்கள். இவ்வுலகில் சீனாவுக்கு அந்த தகுதியுள்ளது என்று கூறுகிறார் ஹு.

-சங்கர சுப்பிரமணியன்.

நன்றி: போபெங் ஹு – மூத்த இணை பத்திரிகையார் – சீன மக்கள் தினசரி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button