
(நீண்ட பலமாதங்களுக்குப் பிறகு இத்தொடர் தொடர்கிறது.வாசகர்கள் இதுவரையில் வெளிவந்த தொடர்களை நினைவில் வைத்துக் கொண்டார்களோ இல்லையோ தெரியாது.இருந்த போதிலும் இதுவரையில் எவ்வாறு பயணப்பட்டுள்ளது என்பதை மிகவும் சுருக்கமாக விபரிக்கிறேன்.பூமியிலிருந்த தம்பதிகளான சாமியும் சுந்தரியும் மாங்கதிர் கிரகவாசிகளால் அழைத்து வரப்படுகின்றனர்.அவர்கள் இருவரும் நண்டுங்கா, அங்கனக்கா ஆகிய கிரகங்களுக்கெல்லாம் சென்று மீண்டும் மாங்கதிர் கிரகத்திற்கு வருகின்றனர்.சாமியும் சுந்தரியும் பூமியில் பல ஆண்டுகள் வாழ்ந்த போதும் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை.ஆனால் மாங்காதிர் கிரகத்தில் மீண்டும் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு முதலிரவும் இடம்பெறுகிறது.முதலிரவுக்குப் பின்னர் பச்சைக் கிரகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்…..)
இனி…
பச்சைக்கிரகத்தில் இருந்த அனைத்துமே பூமியிலிருக்கின்றவை போலவே இருந்தன.
அங்குள்ளவர்கள் தமிழில் கதைத்ததைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.அவர்களிருவரினதும் மனநிலையை அறிந்த பச்சைக்கிரகத்திலுள்ளவர்கள், இந்தக் கிரகத்தில் வாழ்பவர்கள் மாயா இனகத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்கின்றனர்.
சாமிக்கும் சுந்தரிக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.ஒருவர் பலவாண்டுகளாகப் பழகிய தனது சொந்த ஊரைவிட்டுப் போய் வேறொரு ஊரில் வாழத் தொடங்கும் போது அவருக்கு அனைத்துமே புதிதாகவே இருக்கும்.
அப்படிப்பட்டவர் குழந்தையாக இருந்து போது பயம் என்ற உணர்வு அவரிடம் இருக்காது.ஆனால் அவர் வளரவளர தயக்கமும் பயமும் காலச்சூழ்நிலையாலும், பெற்றோராலும், சமூகத்தாலும் போதிக்கபட்டுவிடும்.
பூமியைவிட்டு வரும்வரை சாமிக்கும் சுந்தரிக்கும் பல உணர்வு அவர்களின் வாழ்வோடு இணைந்ததாகவே இருந்தது.
அவர்களிருவரையும் அழைத்துவர பூமிக்குச் சென்ற ஆணும் பெண்ணும் அவர்களிருவரின் கைகளைத் தொட்டதுமே அவர்களிடமிருந்த உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது.
பலகோடி மைல்களைக் கொண்ட இருண்ட பிரபஞ்சத்தில் அவர்கள் பயணம் செய்த போதும்,பூமி கண்ணிலிருந்து மெதுமெதுவாக கண்ணலிருந்து மறைந்த போதும் ஏதோ ஒரு அந்தரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு
ஏற்படவேயில்லை.
பூமியில் பல மணித்தியாலங்களாக கணக்கிடப்படும் பயணங்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு சிலநிமிடப் பயணங்களாகவே தோன்றின.
மாங்கதிர் கிரக வாசிகள் சாமிக்கும் சுந்தரிக்கும் பய உணர்வை அவர்களின் மூளைக்கலங்களிலிருந்து அகற்றிவிட்டார்களேயன்றி பூமியின் நினைப்பை அவர்கள் அகற்றவில்லை.
இப்பொழுது அவர்கள் பச்சைக் கிரகத்திலிருக்கிறார்கள்.அங்குள்ளவர்கள் தமிழில் கதைக்கிறார்கள்.இது சாமிக்கும் சுந்தரிக்கும் ஆச்சரித்தை ஏற்படுத்த அவர்களிருவருக்கும் ஒருபுதுவிதமான உணர்வு ஏற்படுகின்றது.
அந்த உணர்வு ஒரு புதிய மகிழ்வைத் தருகின்றது.அந்த மகிழ்வை அவர்கள் உணருகிறார்கள் ஆனால் அதை அவர்களால் விபரிக்க இயலாது.அங்குள்ளவர்கள் அனைவருமே ஒரே மரபணுக்களைக் கொண்டவர்கள்.
பூமியில் உறவு முறை சொல்லிக் கொண்டாடுவது போல பச்சைக் கிரகத்திலும் இருந்தது.ஆனால் எந்த உறவுகளுக்குள்ளும் வேற்று மனப்பாங்கு இல்லை.
சாமியையும் சுந்தரியையும் தனி ஒரு வீட்டில் குடியிருத்தினார்கள்.அந்தவீட்டைச் சுற்றி பூமியிலிருப்பது போன்ற மரங்களிருந்தன.செவ்வாய்க்கிரகத்திலும் தமிழர்களே இருந்தார்கள்.அவர்கள் தம்மை மறந்து செய்த கொடுமைகளால் அழிக்கப்பட்டதை அவர்கள் கூறியிருந்தார்கள்.
தங்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைதான் பூமியை அழிப்பதற்கு பயன்படப் போவது என்பது சாமிக்கும் சுந்தரிக்கம் தெரிந்த பேர்தும் அதைப் பற்றி அவர்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பச்சைக் கிரகத்தில் அவர்கள் வாழத் தொடங்கியதம் அந்த வாழ்க்கை அவர்களுக்குப் பழகிவிட்டது.
பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் நினைப்பு அடிக்கடி வந்த போதும்,பூமியிலிருந்து கோடிக்கணக்கான கிலோமீற்றருக்கப்பால் இன்னொரு கிரகத்தில் வாழுகிறோமே என்ற நினைப்பை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவர்களுடைய வீட்டுக்குப் பல பேர் வந்து போனார்கள்.எல்லோருமே அன்பு காட்டினார்கள்.வீடுகளில் இருந்த விளக்குகள் மின்சார இணைப்பு இல்லாமல் எரிந்தன.
நித்திரையும் முழிப்பும் பூமியிலுள்ளது போலவே இருந்தது.பூமியிலிருப்பது போலவே இரவும் பகலும் இருந்தன.
சில நாட்கள் செல்ல அவர்களிருவரையும் ஒரு மண்டபம் போன்றிருந்து ஒரு
இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
அங்கே அவர்கள் பார்த்த காட்சி பிரமிப்பை ஏற்படுத்தியது.பூமியிலிருந்து வெளிவரும் அனைத்து மொழிப் பத்திரிகைகளும் நூல்களும் அங்கே இருந்தன.பலர் அவற்றை வாசித்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் வேறு வேறு மொழிப் பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரே செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் ஒரே விதமாகவே இருக்கின்றனவா என்பதை ஒப்பு நோக்குகிறார்கள் என இவர்களை அழைத்துச் சென்றவர்கள் சொன்னார்கள்.
சாமியும் சுந்தரியும் முதல் போயச் சேர்ந்த கிரகம் மாங்கதிர் கிரகம்.அங்கும் அனைத்துப் பத்திரிகைகளும் இருந்தன.இந்தப் பச்சைக் கிரகத்திலும் அது போன்று அனைத்துப் பத்திரிகைகளும் இருந்தன.
பூமியில் நடக்கும் அனைத்து விடயங்களையும் பூமியில் வாழ்பவர்கள் மட்:டுமே அறிந்து கொள்வார்கள் என நினைத்த சாமிக்கும் சுந்தரிக்கும், பூமி கண்காணிக்கப்படுகிறது என்பதும,;பூமியை வேற்றுக்கிரகங்கள் கட்டுப்படுத்தி வருவதுடன் பூமிக்கு வந்து போகிறார்கள் என்பதையும் வியப்புடன் புரிந்து கொண்டார்கள்.
தாங்கள் பூமியிலிருந்த போது வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் பூமிகக வந்து போகிறார்கள் என்ற செய்திகளை அறிந்திருக்கிறார்கள்.இப்பொழுது அதே வேற்றக்கிரகங்களுக்கு தாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவர்களை அடிக்கடி வியக்க வைத்தது அங்குள்ளவர்கள் தங்களுடன் தமிழ்மொழியில் பேசுவதுதான்.
ஒரு புது உலகம், ஆனால் பூமியிலிருப்பவர்களைப் போன்ற உருவங்களைக் கொண்ட மனிதர்கள்.சூழ்நிலைகள் என எல்லாமே பூமியைப் போன்றிருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
அந்த மண்டபச் சூழ்நிலையை இரசித்துக் கொண்டிருந்த அவர்களிருவரையும் அழைத்து வந்தவர்கள் ஒரு இடத்தில் உட்காரச் சொன்னார்கள்.உட்கார்ந்தசர்களுக்கு முன்னால் ஒரு மேசை நகர்ந்து வந்து நின்றது.
மேசையின் கால்களில் சில்லுகள் எதுவும் இல்லை.ஆனால் அது நகர்ந்து வந்திருக்கின்றது.விஞ்ஞானத்தில் பலவாயிரம் மடங்கு முன்னோடியாக வேற்றுக் கிரகங்களிருக்கின்றன என்பதை அவ்வப்போது பூமியிலிருந்த போது கேட்ட செய்தி அவர்களின் கண்முன்னாள் உண்மையாகிக் கொண்டிருந்தது.
அப்பொழுது ஒருவர் பலமொழிப் பத்திரிகைகளை கொண்டு வந்து அவர்கள் முன்னால் இருந்த மேசையில் வைத்துவிட்டு நிற்க அவர் இருப்பதற்காக ஒரு கதிரை நகர்ந்து வர அதில் ஊட்கார்ந்து அவர் சாமியையும் சுந்தரியையும் பார்த்து அன்பாக
புன்னகைத்து ஒரு பத்திரிகையைக் காட்டி இது ரஸ்ய மொழிப் பத்திரிகை வாசியுங்கள் என்று சாமியிடம் கொடுத்துவிட்டு சுந்தரியிடம் இது அரபு மொழிப் பத்திரிகை வாசியுங்கள் என சுந்தரியிடம் கொடுத்தவர் இந்தப் பத்திரிகைகள் இரண்டுமே பூமியிலிருந்துதான் எமக்குக் கிடைக்கின்றன.
இப்பொழுது பூமியில் உள்ள பெரும்பான்மையான பத்திரிகைகள் நூல்கள் அனைத்துமே கணிணி தொழில்நுட்பத்துடன் அச்சடிக்கப்படுகின்றன.எமது தொழில்நுட்பத்துடன் எந்நேரமும் அவர்களின் தொழில் நுட்பத்தை இணைத்து வைத்திருக்கிறோம்.
அவர்கள் பத்திரிகையையோ நூல்களையோ அச்சடிக்க அவற்றின் பிரதிகள் சில இந்த மண்டப அச்சகத்தில் பதிவாகி அச்சடிக்கப்படுகின்றன என்றவர் வாசியுங்கள் என்றார்.
சாமி ரஸ்யப் பத்திரிகையை எடுத்துப் பார்த்ததும்,ரஸ்ய மொழி அவருக்குப் பரிச்சயமான மொழியாகத் தெரிய அவர் வாசிக்கத் தொடங்கினார்.சுந்தரியும் தனக்குக் கொடுத்த பத்திரிகையைப் பார்த்ததும் அரபு மொழி தனக்குப் பரிச்சயமான மொழியாகத் தெரியவே வாசிக்கத் தொடங்கினார்.
சாமி ரஸ்ய மொழியில் கதைக்க அம்மொழி சுந்தரிக்கும் விளங்கியது.சுந்தரி அரபு மொழியில் கதைக்க சாமிக்கும் அது விளங்கியது.இருவருக்குமே தம்மை நினைத்து வியப்பாகவிருந்தது.பூமியிலிருந்த போது தமது தாய்மொழியைத் தவிர இன்னொரு மொழியை பேச வாசிக்கஎ எழுத வேண்டுமென்றால் அந்த மொழியைப் படித்தால்தான் அது சாத்தியமாகும்.
ஆனால் பச்சைக் கிரகத்தில் மொழியைப் பார்த்தவுடனேயே அந்த மொழி ஏற்கனவே அறிந்த மொழியாக இருப்பதற்குக் காரணம், அந்தக் கிரகத்தின் அதீத தொழில்நுட்பமே.இக்கிரகத்துக்கு வந்தவுடனேயே தானாக மூளைக்கலங்களில் அனைத்துக் கிரகங்களின் அனைத்து மொழியும் கண்ணுக்குத் தெரியாக கதிர்கள் வாயிலாக சாமியினுடைய மூளைக் கலங்களிலும் சுந்தரியின் மூளைக்கலங்களிலும் பதிந்துவிடுகின்றன.
ஆனால் இக்கிரககத்தில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே இந்த அபூர்வ சக்தி வந்துவிடும்.
சாமியும் சுந்தரியும் ரஸ்ய மொழியிலும், தமிழ் மொழியிலும்,அரபு மொழியிலும் அந்தக் கிரக வாசியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அவர், உங்களுக்குப் பிறக்கப் பொகும் குழந்தை பிறந்து அடுத்த நாளே பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கிரகங்களிலுமுள்ள மொழிகளைப் பேசும் ஆற்றலைப் பெற்றவிடுவான் என்ற போது அவர்களால் வியப்பை அடக்க முடியவில்லை.
வியப்படைய எத்தனையோ விடயங்கள் உண்டு வாருங்கள் இன்னொரு பகுதிக்குப்
போவோம் என அழைத்தக் கொண்டு போனவர் ஒஉரு மண்டபத்திற்குள் நுழைத்தார்.
சாமியின் கண்களும் சந்தரியின் கண்களும் மண்டபத்தின் உட்பகுதியைப் பார்த்தார்கள் அவை ஒரு வெளியாகவே ஓரிரு விநாடிகளில் அவர்களுக்குத் தோன்றின.
தங்களுடைய கண்களின் பார்வை உயரத்திற்கு எதிரே உற்றுப் பார்த்தவுடன் அங்கே ஒரு தொலைக்காட்சி தெரிந்தது.இப்படி அவர்களின் கண்கள் திரும்பிய இடமெல்லாம் வேறு வேறு மொழித் தொலைக்காட்சிகள் இயங்கிக் கொண்டிருந்தன.
எந்தத் தொலைக்காட்சியை உற்றுப் பார்க்கிறார்களோ அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சத்தம் மட்டுமே அவர்களின் காதுகளுக்குக் கேட்டது.மற்றைய தொலைக்காட்சிகளின் சத்தங்கள் கேட்கவே கேட்காது.
கண்ணின் காந்தப் புலமும் செவிப்புலனும், வேறொரு தொலைக்காட்சியின் சத்தம் இடையூறு செய்யாத வகையில் தொடுகைப்பட்ட தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பச்சைக் கிரகத்தில் இருந்தது.
இது எப்படிச் சாத்தியம் என சாமி கேட்க நினைத்த சமிக்ஞையை அழைத்து வந்தவர் புரிந்து கொண்டதனால், பூமியில் பல மாற்றங்களுக்கு நாங்கள் உட்பட பல கிரகங்களே காரணம் என்றார்.
அந்தக் கிரக மனிதர்களிடம் இன்னொரு அற்புத உணர்வும் உண்டு. ஒருவர் இன்னொருவருடன் கதைக்க நினைக்கிறார் என்பதை கதைக்க வேண்டியவர் புரிந்து கொள்வார்.
(தொடரும்)
![]()