கொரனோ நுண்கிருமிப் பரவலும் சதிவலையமைப்பும்! ஏலையா க.முருகதாசன்

உலகெங்கும் மரண பயத்தை உருவாக்கி பிரளத்தையே ஏற்படுத்த முனையும் கொரனோ நுண்கிருமியை கட்டுப்படுத்தவோ அதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சீனா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சீனாவில் இந்நுண்கிருமியின் தாக்கத்தினால் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் நாட்டுக்கும் இந்த நுண்கிருமி பரவிவிடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் அனைத்தும் உறைந்து போய் எல்லைக் கட்டுப்பாடுகளையும் அவற்றின் நுழைவாயிலில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்நோய் ஆரம்பித்த வுகான் மாநிலத்தில், நோயுற்ற வெளவாலைச் சாப்பி;ட்ட ஒருவகைப் பாம்பினைச் சாப்பிட்டதால், அப்பாம்பிலிலிருந்துதான் இந்நோய் பரவியதாக ஆரம்ப செய்திகள் கூறிய போதும், நாள் செல்லச் செல்ல அது வேறுவிதமான தகவல்களையும் நிரூபணங்களையும் நோக்கி நகரத் தொடங்கியது.
காதுகளுக்கு எட்டும் உயிர்கொல்லி ஆயுத நுண்கிருமி உற்பத்தியை உலக நாடுகள் அறிந்து சீனாவைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்த போதும் சீன அரசினதும் அந்த மக்களுடைய குணாம்சங்களுக்கமைய அதுபற்றி வெளிப்படையாக பேசுவதை தற்காலிகமாக தவிர்த்து வருகின்றன.
அதுவா இதுவா என பொதுமக்களும், நுண்கிருமி ஆய்வாளர்களும் இக்கிருமி பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கையில், சீனாதான் இந்த நுண்கிருமியை உருவாக்கியது என முதல் அறிககையை விட்டவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்து முன்னாள் இராணுவ நுண்கிருமி ஆய்வாளர் ஒருவரேயாகும்.
இக்கிருமியின் தோற்றத்தின் தோற்றுவாயை உன்னிப்பாக உலகநாடுகள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன.
வேறு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இக்கிருமி, வுகான் மாநில இறைச்சிக்கடையில் விற்பனையாகும் பாம்பில் செலுத்தப்பட்டதா என்ற சநதேகமும் இல்லாமலில்லை.
ஒரு நாட்டின் மீதான படைஎடுப்பு என்பன வௌ;வேறு வடிவங்களைக் கொண்டவையாகும். அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமான, ஏற்றுமதி சார்ந்ததும் உற்பத்திப் போட்டிகளும் இருநாடுகளுக்குமிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியிருந்தன.
அந்த முறுகல் நிலை தளர்ந்து ஒற்றுமையை நோக்கி போய்க் கொண்டிருந்த வேளைதான் சீனாவில் நுண்கிருமிப் பரவல் ஆபத்தே ஏற்பட்டது.அமெரிக்கா
மற்றைய நாடுகளுடனான பகைமையை சமாதானப் போர்வையில் எவ்வாறு அணுகி வந்திருக்கின்றன என்பதை தொடர்ச்சியாக கவனிக்கும் சாதாரண மனிதர்களிலிருந்து ஆய்வாளர்கள் ,இராஜதந்திரிகள் வரை அமெரிக்காவின் அணுகுமுறையை அறிந்தவர்களாகவே இருப்பார்கள்.
சீனாவின் பொதுவுடமைக் கொள்கையினின்று தனது பொருளாதார நோக்கத்திற்காக அதிலிருந்து மெதுவாக தளர்த்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையைக் கொண்டிருப்பதற்கு காரணம் உலக நாடுகளிலேயே மிகக்கூடிய சனத்தொகை கூடிய நாடாகவும், அச்சனத் தொகைக்கு ஏற்றவாறு பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டு என்பதற்காகவுமாகும்.
ஆசிய நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலிருந்து வரும் வருவாயைவிட அமெரிக்கா, கனடா ஐரோப்பிய,ஸ்கண்டிநேவியன் நாடுகளுக்கும், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் செலவாணி பலமடங்கு அதிகமாகும்.
சீனத் தயாரிப்பான மின்சார உபகரணங்கள் தொடக்கம் அலங்காரப் பெர்ருட்கள் வரை மலிவான விலையில் ஐரோப்பியச் சந்தைகளில் கிடைக்கின்றன.சீனா வணிக வலையமைப்பை மிக நுட்பமாக கையாண்டு வருகின்றனது.
சீனாவிலிருந்து மக்கள் உலகநாடுகளுக்கு பல்வேறு தேவைகள் காரணமாக முந்தைய காலங்களில் போய்வருவது அரிதாகவேயிருந்தது.இன்று உலகநாடுகள் எங்கும் அவர்கள் அங்கு கல்வி கற்பவர்களாக,பணி செய்பவர்களாக,தொழில்நுட்பவியலாளர்களாக, குறிப்பாக வணிகர்களாக,விடுமுறைக்குச் சென்று வருபவர்களாக காணப்படுகிறார்கள்.
சீனாவின் அணுகுமுறை ஒரு வலையமைப்பாக மாறி வருகிறது.ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டு வந்துவிட்டது. உதவி அபிவிருத்தி என்ற பெயரில் சீனாவின் தேவை இலங்கைக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
உலக நாடுகளின் தலைவனாக தன்னைத் இருத்திக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்தும் தனது பிரமாண்டமான செயல்பாட்டு உருவத்தைத் காட்டிவருகின்ற நிலையில்,யானையின் தும்பிக்கைக்குள் போன எறும்பாக சீனா குடைச்சல் கொடுப்பதாகவே அமெரிக்கா கருதுகின்றது.
சீனாவின் வணிகத்தையும், அதனுடைய பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா வெளிப்படையாகச் செயல்படுவதும்,அதை ஆமோதிப்பது போல மற்றைய நாடுகள் நடந்து கொள்வதைக் காண முடிகிறது.
இந்த நிலையில்தான் கொரனோ நுண்கிருமிப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.இந்த நுண்கிருமி பரவலுக்கு இரண்டுவிதமான ஊகங்கள் காணப்படுகின்றன.அமெரிக்கா தனது சீன ஒற்றர்கள் மூலம் இந்த
நுண்கிருமியை பரப்பியதா அல்லது சீனாவே இந்த நுண்கிருமையை உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது என்பதும் அது பாதுகாப்பு ஏற்பாட்டில் காணப்பட்ட அசிரத்தையால் வெளியே பரவியது என்பதுமாகும்.
அதே வேளை இந்த நுண்கிருமியை உற்பத்தி செய்திருந்த ஆய்வுகூடத்தில் பணிபுரிந்தவர்களில் ஒருவரை அமெரிக்கா விலைக்கு வாங்கியிருக்கலாம், அவர் மூலம் இக்கிருமிப் பரம்பல் நடந்திருக்கலாம்.
சீனா இதுபற்றி எந்தக் கருத்துமே சொல்லவில்லை. சீனாவிலிருந்து வெளிவரும் அரசியல் செய்திகளாகட்டும் வேறு எந்தச் செய்திகளாகட்டும் தேவையற்றவிதத்தில் அவை சொல்லப்படுவதில்லை.அவர்களுடைய மிக வேகமான வளர்ச்சியையே அவர்கள் வெளியில் சொல்லி வருகிறார்கள்.
கொரனோ நுண்கிருமி பாம்பிலிருந்துதான் பரவியது என்பதையே அங்குள்ள நுண்கிருமி விஞ்ஞானிகள் சொல்லி வருகின்றார்கள்.இது உண்மையா பொய்யா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.அதே வேளை, அவர்களே உற்பத்தி செய்து அந்த நுண்கிருமி பரப்பிய ஒற்றரை சீன அரசு கண்டறிந்து அவருக்கு தண்டனைகூட கொடுத்திருக்கலாம்.
உலகில் வெளிப்படையான ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்கிற நாடுகளில்கூட அவர்களின் இரகசியங்களை, இரகசியங்களே வைத்திருக்கின்ற உட்கட்டமைப்பு உண்டு.
தனிமனித பலம், பலவீனம் போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் பலம் பலவீனம் என்பன இருக்கின்றன.தமது பலத்தை வெளிப்படையாக காட்டும் நாடுகள்கூட பலவீனத்தை எவரும் அறியாதவாறு காப்பாற்றி வருகின்றன.
ஒவ்வொரு நாடும் தேர்தலைச் சந்தித்து ஆட்சிகள் மாறினாலும், அந்தந்த நாட்டுக்கான இரகசியங்களை பாதுகாக்கின்ற கட்டமைப்பு எந்தவொரு அரசியமைப்பினாலும் மாற்றப்படாததாகவே இருக்கும்.
இந்நிலைக்கு உட்பட்டு சீன அரசு இப்பொழுது எதிர்கொள்கின்ற கொரனோ நுண்கிருமிப் பரவல் பிரச்சினையில், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட நுண்கிருமியை வேறு நாட்டின் உளவு ஊடுருவல் மூலம்,அவ்வாய்வகத்தில் பணியாற்றியவர் மூலமாக பரவச் செய்திருக்கலாம்.அந்நுண்கிருமியை வெளவாலிலோ அல்லது பாம்பிலோ செலுத்தி ,பாம்பை உண்ணும் மனிதர் மூலம் கொரோனோ நோய் மக்களுக்கு பரவி வருகின்றது.
அல்லது வேறு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்நுண்கிருமி, அந்நாட்டு உளவுத்துறையினரால் சீனாவுக்கு கொண்டு வரப்பட்டு இறைச்சிக்கடைகளில் பரவச் செய்திருக்கலாம்.
நோயை உண்டாக்கும் நுண்கிருமிகள், அவை மிருகங்கள் பறவைகளிலிருந்து
பரபுவையாக இருந்தாலும்,எல்லா நுண்கிருமிகளும் எல்லா உயிரினங்களிலும் மறு உற்பத்தியாக மாறாது.அது அவற்றின் மரபணுக்களைப் பொறுத்ததாகும்.
அல்லது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்நுண்கிருமி, அந்த ஆய்வுகூடத்தின் பாதுகாப்பற்ற தன்மையினால் கசிந்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு.
கொரோனோ நுண்கிருமி தொடர்பாக பலதரப்பட்டவர்களிடமிருந்து அபிப்பராயங்களும் கருத்துக்களும் செய்திகள் வழியாக வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் இந்த நுண்கிருமி பரவும் என்று ஏற்கனவே தனக்குத் தெரியும் என்றும் 65 மில்லியன் மக்களை இது பாதிக்கும் அல்லது கொல்லும் என முக்கியமான தொழில்நுட்ப வணிகத்துறையில் இருப்பவர் கூறியதை ஈண்டு குறிப்பிடத் தக்கது.
இன்று அவர்களை அறியாமலே, கொரோனோ நுண்கிருமியால்பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைதாரிகளாக மாறிவருவதும்,இந்நோய்க்கான மருந்தாக எந்தவிதமான தீர்க்கமான மருந்தையுமே இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
அதே வேளை பெருகிவரும் சனத்தொகையில் இறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனாதான் இப்படியான அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட மக்களின் இறப்பு வரை, ஏற்கனவே இந்நோயத்தடுப்பு மருந்தை கண்பிடித்து வைத்திருந்த போதும் அதனை வெளிப்படுத்தாமல் இருக்கின்றதா என்று சந்தேகத்தையும் தவிர்க்க இயலாது.
கொரோனோ நுண்கிருமி தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு விழுந்த அடிதான்.சீனாவின் உற்பத்திப் பொருட்களை உலகநாடுகள் இனிவருங்காலங்களில் இறக்குமதி செய்யும்போது எடுக்கப்படும் அதீதமான கவனிப்பை சீனா எதிர்கொள்ள வேண்டி வரும்.
சீனாவிலிருந்து உணவு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை வெளிநாடுகள் முற்றுமுழுதாக தடை செய்யவதற்குகூட தீர்மானிக்கலாம்.
ஒரு நாட்டினுடைய உண்மையான வளம் என்பது, அந்நாட்டு மக்களின் நோயற்ற வாழ்வேயாகும்.நோயற்ற மக்களிடமிருந்துதான் ஆரோக்கியமான சந்ததி உருவாக முடியும்.
நுண்கிருமித் தாக்கத்திலிருந்து ஒரு ஆணோ பெண்ணோ மருந்துகள் மூலம் விடுபட்டாலும் இந்நுண்கிருமிகள் அவரின் மரபணுக்; கலன்களில் சிதைவை ஏற்படுத்துவதுடன் ஆண்களுக்காயின் விந்தணுவின் வீரியத்தையும் பெண்களுக்காயின் கருமுட்டைகளின் வீரியத்தையும் சிதைத்துவிடும் வாய்ப்புண்டு.
நுண்கிருமித் தாக்கத்திற்கு உட்படும் பெற்றோரினால் பெறப்படும் குழந்தைகள் இயல்பான குழந்தைகளாக இருக்க வாய்பில்லாமலும் போய்விடும்.
எனவே நுண்கிருமிகளின் தாக்கம் என்பது சாதாரண விடயமல்ல.சீனாவோ உலக
நாடுகளோ கொரனோ நுண்கிருமித் தாக்க நோயிலிருந்து விடுபடுவதற்கான மருந்தை இதுவரை கணடுபிடிக்கவில்லையென்பது இன்னும் உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதே வேளை சீனாவோ, அல்லது மற்றைய நாடுகளோ கொரனோ நுண்கிருமிக்கான மருந்தினைக் கண்டுபிடித்திருப்பினும்; ,தமது திட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட மக்களின் இறப்புவரை சீனா காத்திருக்கின்றதா என எண்ணவும் தோன்றுகின்றது.
ஒரு நாடு தமது மக்களைக் கொல்வார்களா எனக் கேள்வி எழுமாயின் இன்றைய உலகில் இது சாத்தியமே. ஒவ்வொரு நாட்டினுடைய கடந்தகால வரலாற்றினைச் சொல்லும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் உலகம் எதிர்பாராதவகையில் மனித அழிவுகள் பற்றி திடுக்கிடும் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
போராயுதங்களைப் பயன்படுத்தி மனிதர்களை அழிப்பதிலிருந்துகூட மக்கள் தம் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். காற்று ஊடாக பரவும் நுண்கிருமித் தாக்கத்திலிருந்து தப்புவது என்பது மிகக் கடினமானது.
கொரனோ நுண்கிருமிப் போர் பாரதூரமானது என்பதற்கும் அப்பாற்பட்டது.எதிர்காலச் சந்ததியினர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரனோ நுண்கிருமிக்கு சீனா மட்டுமே பொறுப்பு என்பதற்கப்பாலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
![]()