கட்டுரைகள்

திரு.வள்ளுவர் (திருவள்ளுவர்)ஒரு விஞ்ஞான ஆசிரியர்!… ஏலையா க.முருகதாசன்.

திருக்குறள் எனப் பெயர் கொண்டு அரும்பெரும் போற்றுதலுக்குரியதாகவும் நாளாந்த வாழ்க்கைக்குரிய கையேடாகவும் கலங்கரை விளக்காகவும் இருந்து வருகின்ற குறள்களைத் தந்தவரை அவரின் நிகரில்லாச் சிந்தனை கண்டு அவரின் மேன்மை நிலை கருதி திரு என்ற சொல் கொண்டு திருவள்ளுவர் என இணைந்தழைக்கப்பட்டவர்தான் திருவள்ளுவர், மனித உடலை ஆய்வு செய்வதன் மூலமே மனித வாழ்வியலை ஆய்வு செய்து மனித வாழ்வு எப்படி அமைய வேண்டும் எனக் கூறிய விஞ்ஞானியாக பார்க்க வேண்டியவரே திருவள்ளுவர்.

1330 திருக்குறளையும், ஒவ்வொரு திருக்குறளின் பொருளையும் சரிவர உணரந்து உள்வாங்கி படிப்பவர்கள் திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்பதற்கப்பால் வேதியல் விஞ்ஞானப் பார்வை கொண்டு இரண்டடித் திருக்குறள்களுக்கூடாக மக்களுக்கு வாழ்வியலைக் கற்றுக் பெகாடுத்த ஆசிரியராகவும் நோக்கலாம்.

திருவள்ளுவரைப்பற்றிய அறிதலும் அவர் எழுதிய திருக்குறள் பற்றிய அறிதலும் அவரை தெய்வப்புலவர் என்றும் திருக்குறளை ஒரு நல்வழிச் சூத்திரமாகவுமே கருதுகின்றனர்.

சூத்திரம் என்ற சொல்லே விஞ்ஞானம் என்ற சொல்லுக்கு இணையானது.எனவே திருக்குறளை ஒரு வேதியல் விஞ்ஞானப் பாடமாகவும் கொள்ளலாம்.

திருக்குறள் யாருக்கானதெனில் அது மனிதர்களுக்கானது ஆகும்.மனிதர்கள் யாரென்றால் வேதியல் மூலகங்களால் தோற்றுவிக்கப்பட்டவர்களாவர்.

மனிதர்கள் மட்டுமல்ல பூமி தொட்டு இந்தப் பூமியில் காணப்படும் அனைத்து உயிரினங்கள், திடப்பொருள் திரவப்பொருள் என அனைத்துமே வேதியல் இயற்பியல் மூலக்கூறுகளால் ஆனவைதான்.மெஞ்ஞான,விஞ்ஞான உணர்தல் என்பவற்றால் இந்தப் பூமி ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவைகளால் உருவாக்கபபட்டது என்பதாலும்; அதற்கமையவே பூமியின் இயங்குவிசை இருந்து வருவதாலும் இந்த ஐந்து இயங்கு விசைகளும் அத்தியாவசியமாகின்றது.

ஒரு பொருளின் மூலக்கூறுகளுக்கமையவே பொருளின் தன்மை இருக்கும் என்பது விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.மனிதர்களின் நடத்தைக்கும் அவர்களின் பண்புக்கும் அவர்களின் உடலில் கொணடுள்ள வேதியல் மூலக்கூறுகளே காரணமாகின்றன.

இந்த மூலக்கூறுகள் யாவும் ஐம்பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், காற்று, ஆகாயம்,நெருப்பு ஆகிவற்றிலிருந்து எடுக்கப்பட்டவையேயாகும்.உடலில் உள்ள வேதியல் மூலக்கூறுகள்(எலிமண்ட்ஸ்) யாவும் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அனைத்துத் திருக்குறளையும் ஊன்றி வாசித்து, வாசித்ததன் பொருளுணர்ந்து பொருளுணர்ந்ததை இன்னும் இன்னுமாய் ஊடுருவிப் பார்க்கும் போது திருவள்ளுவர் மனிதர்களை நோக்கி அவர்களின் குணாம்சங்கள் பற்றியும் அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்ட வேண்டுமென்பது பற்றியுமே சொல்லியிருக்கிறார்.

மனித சமூகத்திடம் பல வகிபாகங்களாக இருக்கின்ற மன்னர்களாகட்டும் ஐநாயக முறைமைதாங்கிய ஆட்சிப் பண்புகளாகட்டும், ஆண் பெண் பாலியல் வேறுபாடுகளாகட்டும்,சமூகம், குடும்பமாகட்டும் அனைத்தும் மனித உயிரின அலகுகளாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மனிதர்களின் உடல் வேதியல் மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டது என்பதை திருவள்ளுவர் எனும் சித்தர் பார்வை கொண்ட ஆசான் மிகமிகத் தெளிவாக உணர்ந்த காரணத்தினாலேயே மனிதர்களை சரிபடுத்த முடியும் என்பதை உணர்ந்தார்.

திருக்குறளை வாசிப்பவர்களின் மூளையைச் சென்றடையும் உணர்வுகள் மூளைக்கலன்களில் உள்ள மிக மிக நுண்ணிய கலன்களின் அதிர்வுகளை செயல்பாடாக மாற்றுகின்றன.வேதியல் பிரதிபலித்தலை ஏற்படுத்துகின்றன(றிசல்ரன் அக்சன் சுநளரடயவெ யஉவழைn).

கல்வித்துறையில் இன்று கல்வியின் அணுகுமுறை நவீன எண்ணங்கள் ஊடாக பலபிரிவுகளாக பகுத்ததன் காரணத்தால் அனைத்துப் பிரிவுகளிலும் விஞ்ஞானப் பார்வைக்கூடாக கற்பிக்கப்படுகின்றன.

விஞ்ஞான அரசியல், விஞ்ஞானப் பொருளாதாரம், விஞ்ஞானத் தொழில்துறை, விஞ்ஞான இலக்கியம் என நீண்டு கொண்டே போகின்றன.

ஆனால் இதனை சித்தரான திருவள்ளுவர் என்றோ உணர்ந்துவிட்டார்.அதனாற்தான் விஞ்ஞான ஆசானாக தன்னை வரித்துக் கொண்டு திருக்குறள்களை எழுதியுள்ளார்.

உதாரணமாக கீழுள்ள குறள் எதைச் சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

‘இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சியவர்க்கு’

இதில் எங்கே விஞ்ஞானத் தன்மை இருக்கின்றது?.மனித உடலுக்கும் வேதியல் செயல்பாடும் எங்கே காணக்கிடைக்கிறது என்று கேள்வி எழுகிறதல்லவா?. உண்டு என்பதை இக்குறளே தெளிவர உணர்த்தியுள்ளது.இக்குறளின் பொருளுணர்த்தலில் ‘அறியாமை என்பதும் துன்பமே, அதிலிருந்து குற்றமற்ற அறிவுள்ளவர்களுக்கு இன்பம் உணடாகும்’ என்பதேயாகும். அறியாமை என்றால் என்ன?.அது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை நுட்பத்தன்மையுடன் சிந்தித்தால் புதிய விடயங்களை ஒருவன் அறியும் சூழு;நிலையே காரணமாகின்றது.அறியாமை என்பது துன்பத்திற்கு ஒப்பானதாகும் அறிந்து கொள்ளல் இன்பத்திற்கு ஒப்பானதாகும்.

அறிதல் என்பதையோ அறியாமை என்பதையோ மனித உடல் எவ்வாறு உள்வாங்கி எதிர்வினையாற்றி பின்பிரதிபலித்து நிற்பதென்பது அவ்வுடலில் உள்ள மிகமிக நுண்மையான மூளைக்கலங்களாலும் அந்த அதிர்வுகளை வெளிப்படுத்தியும், வெளிப்படுத்தியதை அதிர்வலைகளாக உணர்தலில், உணர்ச்சிகளில் கொண்டு செலுத்ததலினாலேயே இது சாத்தியப்படுகின்றது.

வேதியல் செயல்பாடு இல்லையெனில் மனிதனால் இயங்கவே முடியாது.உயிர் வாழ்வதற்கும் அதுவே காரணமாகின்றது.

இன்னொரு குறுள்,

‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து’

திருவள்ளுவர் ஒரு மங்கையின் புணர்ச்சி மகிழல் நோய்க்கு எவ்வாறு தானே மருந்தாகிறாள் என்பதை இக்குறளில் கோடிட்டுகாட்டியுள்ளார்.வாத நோயை உதாரணமாக கொண்டு அதற்கு கொடுக்கப்படும் மருந்துக்கும் புணர்ச்சி மகிழல் நோய்க்கும் வேறுபாடு உண்டென்பதை,வாதம் வருவதற்கு காரணம் உடலில் உள்ள வேதியல் பொருட்களின் எதிர்வினைகள் பற்றாக்குறை மிகையாதல் அல்லது எதிர்கொள்ளாமையாகும்.ஆனால் புணர்ச்சி மகிழல் என்பதம் வேதியல் செயல்பாடே எனச் சொல்லி அந்நோய்க்கான மருந்தை அவள் தன்னவனுடன் புணர்ச்சி கொண்டு திருப்திப்படுத்தலேயாகும் என்கிறார்.

இங்கே இரண்டுவிதமான மருந்துகளை சித்தரான திருவள்ளுவர் அறிமுகப்படுத்துகிறார்.ஒன்று நோய்க்கான வெளி மருந்து.இன்னொன்று தனக்குள்ளேயே நோயை சரிவரப்படுத்திக் கொள்ளும் மருந்தாகும்.

வெளிமருந்து எவ்வாறு நோயைக் குணமடைய வைக்கின்றது என்பதை மனித உடலின் வேதியல் செயல்பாட்டினை அறிந்தமையினாலும்,காமத்தை உள்ளுணர்ச்சி; நோயாகவும் அந்நோய்க்கும் வேதியல் செயல்பாடே காரணமென்பதால் இருவகை மருந்தைக் கூறியுள்ளார்.

அனைத்துத் திருக்குறள்களுமே விஞ்ஞானப் பார்வை கொண்டவையே.

நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்ட மனித உடலின் வேதியல் செயல்பாட்டை மெய்யுணர்தல்

சிந்தனைக்கூடாக விஞ்ஞானப் பார்வைக்கூடாக திருக்குறள் எனும் உடலை ஊடறுத்துச் செல்லும் கதிர்வீச்சுக் கருவி மூலம் கண்டறிந்தவர் சித்தர்,யோகி, ஆசான் என அழைக்கப்படுதலுக்குமுரியவரே திரு.வள்ளுவராகும.;

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button