கட்டுரைகள்

திரு.சி.விக்னேஸ்வரனும் நடிகர் ரஜனிகாந்தும்!.. ஏலையா க.முருகதாசன்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த முன்னாள் நீதியரசரும், முன்னாள் வடக்கு மாகாணசபை முதல்வருமான திரு.சி.விக்னேஸ்வரன் அவர்கள், நடிகர் ரஜனிகாந்தையும் போயப் பார்த்திருக்கின்றார்.

பலருக்கு பல நடிகர்களின் நடிப்பைப் பிடிக்கும்.தனிப்பட்ட ரீதியில் நடிகர்கள் மீது அவர்களின் நடிப்பின் மீது ஒரு கவர்ச்சியும் பிடிப்பும் ஏற்பட்டு அவர்களின் விசிறியாகிவிடுவார்கள்.விசிறி என்றால் நடிகர்களுக்கு விசுக்கிவிடுபவர்கள் என்பதுதான் அர்த்தம்.ஆங்கிலத்தில் கயn என்றாலும் விசுக்கிறதுதான் அர்த்தம்.விசுக்கிறது, சாமரை வீசுவது எல்லாம் பணி என்ற பெயரில் ஒரு அடிமைத்தனமான வேலைதான்.எல்லப் படத்திலும் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடிக்காத போதிலும், அவர்கள் நடிக்காத படங்களைக்கூட வேற லெவல் செம என்று கொண்டாடி மெய்தான் விதிர்விதிர்த்து மெய்சிலித்து புளகாங்கிதம் கொள்ளும் விசிறிகள் எல்லா வயது மட்டத்திலும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரேமானந்தாவை தனது ஆன்மீகச் செயல்பாட்டிற்கான குருவாகக் கொண்டாடும் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் ரஜனிகாந்தை அவரின் விசிறியாகப் போய்ப் பார்த்தாரா அல்லது அரசியல் குருவாகப் போய்ப் பார்த்தாரா தெரியவில்லை, ஆனால் இருவரும் அரசியலில் காலத்தைக் கடத்தியவர்கள் என்ற ரீதியில் அவர்களிருவருக்கும் பெரிய ஒற்றுமை உண்டு.

வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை வைக்க ஏன் தயங்குகிறீர்கள், தம்மைத்தானே ஆளும் உரிமையை வடக்கு மாகாண சபைக்கு ஏன் வழங்கத் தவறுகிறீர்கள் எனக் கேட்டுக் கேட்டு இறுதியில் வடக்கு மாகாண சபைத் தேர்தலும் நடந்து இலங்கையின் நீதித்துறை சார்ந்த சட்டங்களை மட்டுமல்ல இலங்கையாட்சிச் சட்டங்களையே நன்கறிந்தவர் என்று பெரிதும் நம்பி சட்டத்தில், உப சட்டங்களில் உள்ள நெளிவு சுழிவுகளை நன்கறிந்தவர் மும்மொழிகளையும் பேசத் தெரிந்த ஆளுமையுள்ளவர் வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தை சிறப்பாக அபிவிருத்தி செய்வார் என நம்பி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவரைத் தெரிவு செய்ய முதல்வர் வேட்பாளரான இவருக்கு மக்கள் நம்பிக்கையுடன் பலவாயிரம் வாக்குளால் வெற்றி பெறச் செய்தனர்.

இவரின் ஆட்சியில்,போரின் காரணத்தால் சொந்த ஊரைவிட்டு போனவர்களைப் பற்றி இதுவரை யாருமே சிந்திக்கவில்லை என்பதைப் போலவும், காணாமல் போனோரைப் பற்றி தன்னைப் போல தமிழரின் எந்த அரசியல்வாதிகளுமே சிந்திக்கவில்லை என்பது போலவும், வடக்குமாகாண சபையின் அபிவிருத்திக்காக வந்த நிதியைப் பயன்படுத்தாமல்: பயன்படுத்த தெரியாத வினைத்திறன் அற்ற முதல்வராக இருந்தது மட்டுமல்லாது, அறிக்கைகளின் பிதாமகன் என தன்னை அறிமுகப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புகளை கானல் நீராக்கி,இவரைத் தெரிவு செய்தவர்களை இலவு காத்த கிளியாக்கி அவர்களின் முகத்தில் கரியைப் பூசிய முன்னாள் முதல்வர் நடிகர் ரஜனிகாந்தை அரசியல் பேச இலங்கைக்கு வருமாறு அழைத்திருக்கிறார். எவ்வித இராஜதந்திரமுமற்று பொழுது போக்கு மடமாக வடக்கு மாகாண சபைக் கட்டிடத்தை மாற்றிய பெருமை முன்னாள் முதல்வரையே சாரும்.

படங்களில் வரவேண்டிய நேரத்தில் வருவேன், சிங்கம் சிங்கிளாகத்தான் வரும், நான் ஒரு தடவை சொன்னால் நூறுதடவை சொன்னதற்குச் சமன் என்ற வசனமூலம் இரசிகர்களை உசுப்பேத்திவிட, தலைவா உங்கள் வருகைக்காக தமிழகம் தவம் கிடக்கிறது, தமிழகத்தையாள அனைத்துத் தகுதியுமுள்ள தலைவன் நீங்கள் ஒருவனே…ஒருவனே என ரஜனிகாந்தை இரசிகர்கள் உசுப்பேத்த, தலைப்புச் செய்திக்காக ஊடகங்கள் அவரிடம் போய் அரசியல் தத்துவங்கள் கேட்க நான் ஒருவனே அதற்கான தகுதியுடையவன் என ரஜனிகாந்தும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பதை தமக்குள் சிரித்துக் கொண்டிருக்கும் அரசியல் விற்பன்னர்களான பேராசிரியர்களும் கல்வியாளர்களும் இருப்பதை அவர் அறிய மாட்டார்.

இந்தா அரசியலுக்கு வருவேன் எனச் சொல்வார்.பிறகு இரண்டு படம் நடிப்பார்.படம் வெளிவரும் நேரத்தில் பரபரப்பாகப் பேசுவார்.பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாக ஒரு செய்தியைக் கசிய வைப்பார்.இப்டியாக அவர் கூத்துக் காட்ட, அரசியலே என்னவென்று தெரியாத,இதுவரை எந்த மக்கள் போராட்டத்திலும் ஈடுபடாத எவருக்மே எந்தக் கருத்துமே தெரியாது என்ற நினைப்பில் கருத்துக்களை சொல்லியே காலத்தை கடத்துபவர்தான் நடிகர் ரஜனிகாந்த்.நாளாந்த செய்தியில் அவரின் பெயர் வரவேண்டும்,

தன்னைப் பற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் வரவேண்டும்.அரசியல் ஆளுமையற்ற ஒருவரைப் பற்றி ஆளுமையுள்ள பலர் விவாதிக்க அவரும் பெரும் மகிழ்வில் திளைத்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் இமயமலைக்கு சீக்கரத்தில் போய்விடுவேன் எனச் சொல்வதும் இவரின் தந்திரம்.

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ராதிகா சொன்ன செய்தி’ தானும் ரஜனிகாந்தும் சத்துருக்கன்சின்காவுடன் ஒரு இந்திப் படத்தில் நடிப்பதற்காக மும்பை போயிருந்த போது சந்துருக்கன்சின்காவிடம் பத்து வருடத்திற்கு பிறகு இமயமலைக்கு போய்விடுவேன் என்று ரஜனிகாந்த் சொல்ல அதற்கு என்னைப் போக வைப்பாயே தவிர நீ ஒருநாளுமே போகமாட்டாய் என்று அவர் சொல்லியிருக்கிறார்.ஒரு இந்தி நடிகருக்கு ரஜனிகாந்தின் பலவீனம் தெரிந்திருக்கிறது.தமிழக இரசிகர் கூட்டத்திற்கு புரியவுமில்லை,தெரியவுமில்லை.

கடலில் பெய்த மழையாக ஐந்துவருட காலத்தை அறிக்கைகள் வாசித்தே வீணடித்த இலங்கையின் வடக்குமாகாண முதல்வர,அரசியலை திரைப்படமாக நினைக்கும் ரஜனிகாந்தை அரசியல் பேசுவோம் வாருங்கள் என அழைப்பு விட்டிருக்கிறார்….?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button