கட்டுரைகள்

ஆசிரியர் தலையங்கங்ளும் அரசியல் நிலைப்பாடுகளும்!… ஏலையா க.முருகதாசன்

பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வரும் ஆசிரியர் தலையங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல.அவை உலகத்தை உருவாக்கவும் திருத்தவும் மாற்றியமைக்கவும் என வல்லமை பொருந்தியவை.

பத்திரிகை ஆசிரியர் அல்லது சஞ்சிகை ஆசிரியர் தனது பேனாவின் நுணியால் மக்களை வழிநடத்துகிறார் என்பதை யாருமே மறக்க முடியாது.அதே வேளை திசைமாற்றி மக்களை வழிநடத்தவும் ஆசிரிய தலையங்களால் முடியும் என்பதும் உண்மையே.ஆசிரியர் தலையங்கங்கள் அவ்வளவு வலிமை பொருந்தியவை.

ஆசிரியர் தலையங்கம் என்பது நீண்டதாகவும் இருக்கலாம் அல்லது அவை சுருக்கமாவும் இருக்கலாம், ஆனால் அவற்றுக்குள் சொல்லப்பட்டவை எவை என்பதே முக்கியமானதாகும்.அவை அரசியலை,சமூகத்தை, நாட்டை, உலகத்தை, பொருளாதாரத்தை, இலக்கியத்தை,கலையை,விஞ்ஞானத்தை எனவும் இன்னும் அவையொன்றினதும் பல்வேறுபட்ட பிரிவுகளையம் உற்று நோக்கி அவற்றின் பெறுபேறுகளையும் அவற்றின் அணுகுமுறையால் விளைந்த சாதக பாதகங்களை மக்களுக்குச் சொல்வதாகும்.

ஒரு நாட்டின் மக்களுக்கான அரசியல் நிர்வாகமே நாட்டின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் தீர்மானிக்கின்றது.

துணிச்சலான ஆசிரியர்கள் நடுநிலையான ஆசிரியர்கள் தமது பேனாவை சரியான முறையில் பயன்படுத்துவார்கள்.துணிச்சலான, பக்கம் சாராத ஆசிரியர்கள் தமது ஆசிரிய தலையங்களில் மக்களின் நாடிபிடித்தும் அதன் மூலமாக தனது எண்ணத்தையும் கலந்து தெளிவானதொரு ஆசரியர் கருத்தை தமது ஊடகங்களில் பதிவார்கள்.

ஒரு நாட்டை எழுச்சியடையச் செய்வதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும்.அதுவும் பக்கசார்பற்ற ஊடகங்கள் அதிகளவு பங்காற்றுகின்றன.பத்திரிகைகள், சஞ்சிகைகள் எனக் கொண்ட நாடும் அந்த நாட்டு நிர்வாகம் மேற்கூறிய ஊடகங்களின் கருத்தை அறிதலில் கவனம் செலுத்தும் போதுதான் சரியான அரசியல் அணுகுமுறையைக் கையாள முடியும்.

ஒரு நாட்டினுடைய பொறுப்பான தலைவன், நாட்டுக்கான அன்றாட அலுவல்களை ஆரம்பிக்கும் முன்பு தனது நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் தினசரி ஊடகங்களின் ஆசிரியர் தலையங்களையும், சர்வதேச சஞ்சிகைகளின் ஆசிரியர் தலையங்கங்களையும் முதலில் வாசிப்பான்.தனதும் தனது அரசினதும் தனது மக்களுக்கான அரசியல் அணுகுமுறை மூலம் தனது நாட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றதா அல்லது தவறுகள் ஏற்பட்டிருக்கின்றதா என்பதையும் உலக அரசியலில் தனது நாட்டினுடைய பங்காற்றல் எவ்வiகையான சாதக பாதக விளைவுகளைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதை

ஆசிரியர் தலையங்கங்கள் மூலம் கண்டறிவான்.

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைப்பதும் அரசு மக்களுக்கான பணியில் சரியான அணுகுமுறையைக் கொண்டிருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தி அவர்களை வாழத்துவதுடன், சமகால அரசின் பொருளாதாரக் கட்டமைப்பில், மக்களுக்கான தேவை நோக்கி அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை சரியானதே என மக்களைச் சிந்திக்க வைப்பதும் ஒரு ஊடகத்தின் ஆசிரியரின் கடமையாகும்.

பத்திரிகைகள் தினசரிப் பத்திரிகைகளாகவும் வாராந்த பத்திரிகைகளாகவும் அது போல சஞ்சிகைகள் வாராந்த சஞ்சிகைகளாகவும் மாதாந்த சஞ்சிகைகளாகவும் வெளிவருகின்றன.

அவை எவ்விடைவெளிக்கமைய வெளிவந்தாலும் அவ்வூடகத்தின் ஆசிரிய தலையங்கம் மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது..பத்திரிகை ஒன்றை வெளியிடுவதோ சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதோ சமூக,இன, உலக நோக்கமைந்ததாகும், அவ்வாறல்லாதவை மக்களுக்கு எவ்வித பலனையும் அளிப்பனவல்ல.

ஒரு உதாரணமாக அப்போதிக்க என்ற மருந்துகளை விற்பனை செய்யும் கடை நிறுவனம்கூட தனக்கென ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றது.அதிலும்கூட அந்நிறுவனக்குழுமத்தின் அச்சஞ்சிகை ஆசிரியர் தமது நோக்கத்தை “எனது கருத்து” என்று ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார்.

ஒரு நாட்டினுடைய பல்வேறுபட்ட நிறுவனங்கள் தொழிற்சாலைகள்கூட தமக்கான ஊடகமாக தமது நிறுவன தொழிற்சாலை சம்பந்தமான சஞ்சிகைகளை நடத்துகின்றன.அவை தமக்கான கருத்தை வெளிப்படுத்தம் போது தமது தொழிலுக்கு, நிறுவனத்துக்கு ஏற்படும் அரசு சார்ந்து , அரசின் பொருளாதாரக் கொள்கை சார்ந்து இருக்கும் சாதக பாதக விளைவுகளை தமது சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

தொலைக்காட்சி ஊடகங்களோ வானொலி ஊடகங்களோ அரசிய்வாதிகளை நேர்காணல் காணும் போது பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த ஆசிரியர் தலையங்களை மேற்கோள் காட்டி கேள்விகளை வினவும் போது அரசியல்வாதிகள் பதில் அளிக்கத் திணறுவதை காணொனி கேளொலி வாயிலாக காணவும் கேட்கவும் முடிகின்றது.

ஆசிரியர் தலையங்கங்களால் நாடாளுமன்றங்கள் கலைக்கப்படுவதும், பெரும்பான்மையை இழந்து எதிர்கட்சியினர் ஆட்சியில் அமர்வதும் உலக நாடுகளில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பவைதான்.

அரசியல் கட்சிகளில் கட்சிசார் அங்கத்தவர்களாக அங்கம் வகிப்பவர்கள் என ஒரு பிரிவும் எந்தக் கட்சியிலுமே அங்கம் வகிக்காது பொதுமக்களாக எந்த ஆட்சி தமக்குத் தேவையென தீர்மானித்து அத்தீர்மானத்தை வாக்குகளால் நிர்ணயிக்கும் வல்லமை பொதுமக்களுக்கு உண்டு.

இத்தகைய மக்களின் மனப்போக்கை எடைபோட்டு எழுதுவதில் நுட்பத்தன்மையுடைய ஆசிரியர்களின் ஆசிரிய தலையங்கங்கள் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

ஒரு அரசும், அந்த அரசின் தலைவனான சனாதிபதியோ அல்லது பிரதம மந்திரியோ, அந்த அரசின் பல்வேறு அமைச்சுகளின் அமைச்சகர்களோ தமது மக்களுக்காக பணிகளை சரிவர செய்ய வேண்டுமென்றால் பொது ஊடகங்களான பத்திரிகை சஞ்சிகைகளில் வரும் ஆசிரியர் தலையங்கங்களையும்,நிறுவனம், தொழிற்சாலை ஆகியவை வெளியிடும் சஞ்சிகைகளின் ஆசிரியர் தலையங்களையும் வாசிக்க வேண்டும்.ஏனெனில் அரசுபற்றிய ஒட்டுமொத்த மக்களின் முகங்களையும் அங்கே பார்க்க முடியும்.

;

ஆசிரியர் தலையங்கள் நடுநிலையானதாகவும், சார்புக் கொள்கை உடையனவாகவும் இருப்பதற்குக் காரணம் ஊடக நிறுவனவர்களின்; மனப் போக்குக்கு ஒத்ததாக ஊடக ஆசிரியர்கள் எழுதவேண்டிய நிர்பந்த நிலையை அடைகிறார்கள்.

கட்சிசார் ஊடகங்களின் ஆசிரியர்கள் தமது கட்சி சார்ந்த முனனெடுப்புகளை சொல்வதிலும், தமது கட்சி ஆட்சியில் இருக்குமாயின், அந்த கட்சியின் ஆட்சிமுறைமையில் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையிலும்கூட இதுவரை இல்லாத ஆட்சி என ஆசிரியர்கள் ஆசிரியர் தலையங்கங்கள் எழுதுவார்கள்.

நாட்டின் அபிவிருத்தியற்ற நிலைகளைக்கூட நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்ற மாயத் தொற்றத்தை உருவாக்கி மக்களை தமது கட்சியின் ஆட்சியே சிறந்தது என ஏற்றுக் கொள்ள வைப்பார்கள்.

இன்னும் ஒரு எழுத்து வித்தையையும் ஆசிரியர்கள் கையாளுவார்கள்.தமது ஊடகம் பக்கசார்பற்றது எனக் காட்டிக் கொள்வதற்காக அரசைக் கண்டிப்பது போலவும் ஆசரியர் தலையங்கங்களை எழுதுவார்கள்.ஆனால் கட்சியின் அறிவுறுத்தலுக்கமையவே நடைபெறும்.

கட்சி சார்ந்த ஊடக ஆசிரியர்களுடன் கட்சிக்கு முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு.கட்சி ஒன்று ஊடகத்தை நடத்தாத போதிலும் ஒரு கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஊடக நிறுவனருடனும் ஊடக ஆசிரியருக்கு முரண்பாடுகள் ஏற்படும்.

பணியிலிருக்கும் ஆசிரியருக்கென்று சில ஊடகதர்மப் பண்புகளிருக்கும்.அப்பண்பு அவரின் ஆசிரியர் தலையங்கங்களில் வெளிப்பட்டு நிற்கையில் முரண்பாடுகள் ஏற்படுவதும் ஆசிரியர் தொடர்ந்து அப்பணியில் இருப்பதை விரும்பாவிடினும் வாழ்வியல் வருவாய் கபாரணமாக சகித்துக் கொண்டு அப்பணியில் இருப்பதுண்டு.

ஆனால் நீண்டகாலத்திற்கு அவ்வூடக ஆசிரியப் பணியில் தொடர்ச்சியாக இருக்க முடியாத நிலையில்

அப்பணியிலிருந்து விலகவிடுவதுமுண்டு.

அதே வேளை நிறுவனர் மனப்போக்கிற்கும், கொள்கைக்கும் ஒத்திசைவாக ஆசிரியர்ப் பணியிலிருப்பவரின் கொள்கை இருப்பின் அது இன்னும் ஊடகத்தை கவனிக்கத்தக்க நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

ஆசிரியர் தலையங்கங்களை மக்களும், வேறு வேறு ஊடகங்களும் உற்றுக் கவனிப்பதற்கு காரணம் சமகாலத்தை ஆசிரியர் தலையங்கங்கள் வெளிப்படுத்தி நிற்பதற்காகவே.

திட்டமிட்டு மக்களை குழப்புவதிலும் ஆசிரியர் தலையங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஒரு இனத்திற்கு எதிராக, ஒரு மதத்திற்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்ய முதலில் மக்களை ஆசரியர் தலையங்கள் மூளைச் சலவை செய்யத் தொடங்கும்.

தொமடர்ச்சியாக பொய்களை சொல்வதன் மூலம் இது சாத்தியமாகவிடுகின்றது.சதாம் உசைனை சர்வாதிகாரியாகக் காட்டுவதில் சார்புநிலை ஊடக ஆசிரியர் தலையங்கங்கள் பெரும் பங்கு வகித்தன.

உலக நாடுகளின் வல்லரசாளர்கள், உலக நாடுகளில் காணப்படும் அரசுகள் தம்மை அணுசரித்து போகாதவிடத்து அவ்வரசுகளை அந்நாட்டின் மக்கள் விரும்பவில்லை என்பதை தொடர்ச்சியான ஆசிரியர் தலையங்கங்கள் ஊடாக வெளிப்படுத்துவார்கள்.

இத்தோற்றத்தை ஊடக அறிஞர்கள் மட்டத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் உலக ஊடகங்களின் ஒருமித்த கூட்டு முயற்சி முக்கியமான பங்காகின்றது.

ஊடக அறிஞர்கள் எது சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பதை தோற்றுவிப்பதற்காக தர்க்க ரீதியாக ஒரு நாட்டினுடைய அரசியல் நிர்வாகத்தில் தவறுகளிருப்பது போல இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டி அவர்களை நம்ப வைத்து விடுவார்கள்.

ஒரு நாட்டினுடைய அரசியல் பல கட்டமைப்புகளைக் கொண்டிருந்த போதிலும் அத்தியாவசியமானதாகக் கவனிக்கப்படுவது நிதியும் பொருளாதாரமுமே.

எனவே இந்த இரண்டின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே ஒரு அரசை இல்லாமல் செய்ய முடியும்.

நடைமுறை அரசுக்கு எதிரான கட்சி சார் அல்லது கொள்கை சார் நிறுவனர் ஊடகங்கள் தமது ஆசிரியர்தலையங்கங்கள் மூலம் பொருளாதாரம் நிதி போன்ற கட்மைப்புகளின் மீது பாரிய கருத்தியல் போரை உருவாக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button