பலதும் பத்தும்

பூமிக்கு புதிய குட்டி நிலவு கண்டுபிடிப்பு

பூமிக்கு ஏற்கெனவே நிலவு இருக்கும் நிலையில், தற்போது புதியதாக இன்னொரு நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த வானியலாளர்கள் இந்த குட்டி நிலவை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நிலவுக்கு 2026QQ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஹங்கேரியிலுள்ள கொன்கொலி ஆய்வகத்தை சேர்ந்த வானியலாளர் கிறிஸ்டியன் சார்னெஸ்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி டெலஸ்கோப் வைத்து பொழுதுபோகமல் வானத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்திருந்தார். அப்போது வாம்மா மின்னல் என்பதைபோல.. சர்ரென ஏதோ வேகமாக கடந்து செல்வதை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் இது மனிதர்களால் அனுப்பப்பட்ட விண்கலத்தின் குப்பையாக இருக்கும் என்று தான் நினைத்திருந்தார். ஆனால், பின்னர் ஹவாய் பல்கலைக்கழகத்தின் 2.2 மீட்டர் தொலைநோக்கி மற்றும் லோவல் டிஸ்கவரி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில்.. இது இயற்கையான விண்கல் என்பதை சர்வதேச வானியல் ஒன்றியத்தின் குறுங்கோள் மையம் உறுதி செய்துள்ளது.

இந்த விண்கலின் பாதையானது நமது நிலாவைப் போல வட்டமாக இல்லாமல்.. சூரியன் மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையாலும் இழுக்கப்படுவதால் ஒழுங்கற்ற பாதையில் பூமியை சுற்றி வருகிறது.

எப்படி இருந்தாலும்.. பூமியை சுற்றி வந்தாலே அது நிலா தான் என்கிற அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில், இந்த விண்கலக்கு தற்காலிக நிலா அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு மீண்டும் சூரியனை சுற்ற தொடங்கும் என்பதால்தான் இதற்கு தற்காலிக நிலா அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விண்கல் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியின் சுற்று பாதையை கடந்து செல்கிறது. ஆனால், அதன் வேகம் மற்றும் தூரம் சாதகமாக அமையும் போது மட்டுமே.. பூமியின் ஈர்ப்பு விசையில் சிக்கி நமக்கு நிலாவாக மாறிவிடுகிறது. இந்த விண்கல் 1 முதல் 2 மீட்டர் அகலமே இருக்கும்.

இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், இது மிகச் சிறியதாக இருப்பதால்.. வெறும் கண்ணால் இதை பார்க்க முடியாது.

இது டிசம்பர் 13ஆம் திகதி அன்று பூமிக்கு மிக நெருக்கமாக வரும். நெருக்கமாக எனில் சுமார் 13.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவு நமக்கு நெருங்கி வரும். இது பூமிக்கும் நிலவுக்கும் இருக்கும் போது தூரத்தை விட 3.5 மடங்கு நீண்ட தூரமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *