மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது; செல்வராசா கஜேந்திரன்

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இடம் பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் சிங்கள பேரினவாத அரசு ஆளுகின்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுர குமார ஆட்சிக்கு வந்ததும் இனவாதத்தை ஒழிப்பேன் என கூறி தற்போது இரண்டு வருடங்கள் கடந்தும் திருகோணமலையில் ராஜபக்சர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இனவாதம் தொடர்கிறது.
அண்மையில் தம்பலகாமம் பிரதேச பண்ணையாளர்கள் தங்களது கால் நடைகளை மொரவெவ பகுதிக்கு கொண்டு சென்ற போது பெரும்பான்மை இனத்தவர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கால் நடைகளை கொண்டு செல்ல முடியும் என்பதை ஜனாதிபதிக்கு எடுபிடியாக இருக்கின்ற அமைச்சர் ஒருவரே எழுத்து மூலமாகவும் கூட்டத்தில் அனுமதியை வழங்கியுள்ள போதிலும் கால் நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()