இலங்கை

அநுரவை சிக்கவைத்து தென்னிலங்கையை குழப்புவதற்கு களத்தில் குதித்த மகிந்தவின் நண்பர்

தமிழர் பகுதிகளில் தற்போது இடம்பெற்றுவரும் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில், முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களாக இருக்கும் சிலர், தமிழர்களின் இழப்புகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தற்போதைய தலைமுறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள தொல். திருமாவளவன், இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவிப்பது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளதாகவும், இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கு அவருக்கு யார் அனுமதி வழங்கியது என்றும் சுரேன் ராகவன் ஊடகச் சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, நரேந்திர மோடியைப் போன்று இருக்க வேண்டிய மகிந்த ராஜபக்ச தற்போது இவ்வாறானதொரு நிலைமையில் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *