இந்தியா

அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் – எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இடையே கருத்து மோதல்

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, சசிகலா உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணி இரண்டு கோடி கட்சித் தொண்டர்களில் ஒருவர் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்த வேலுமணி, அந்தத் தொண்டர்கள்தான் பழனிசாமியைப் பொதுச்செயலாளர் பதவிக்கு உயர்த்தியவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பத்தைக் கட்சித் தலைமை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இரு தலைவர்களுக்கும் இடையே எந்தப் பிளவும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் பேசாமல், கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *