இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

உயிரளவியல் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“கண்காணிப்பு அரசுக்கு வழிவகுக்கும், இந்தியாவுக்கு தரவுகளைத் தாரைவார்க்கும் உயிரளவியல் தரவு அடையாள அட்டையை எதிர்ப்போம்”, “இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தங்கள் 7ஐயும் வெளிப்படுத்துக” உள்ளிட்ட தொனிப்பொருள்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு தரைவார்க்கும் வகையில் உடன்படிக்கைகள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்தால் அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களுடன் கைரேகை, கருவிழி, முக அடையாளம் போன்ற தனித்துவமான உயிரியளவியல் தரவுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில் அந்த தரவுகளை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக அரசாங்கம் நிறுவத்த வேண்டும். அத்துடன் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
![]()