கார்- பேருந்து விபத்தினை செய்தியாக்கி கொண்டிருந்த உலங்குவானூர்தி விபத்து-மூவர் பலி; video

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் (இலங்கை நேரப்படி இன்று (16) அதிகாலை 5.30 மணியளவில்) இடம்பெற்ற கார்- பேருந்து விபத்தினை செய்தியாக்கி கொண்டிருந்த NBC தொலைக்காட்சி ஊடகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உலங்குவானூர்தி இரண்டு வர்த்தக கட்டிடங்களுக்கு இடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த உலங்குவானூர்தியில் NBC4 ஊடகத்தின் வான்வழி செய்தியாளர் Eliana Moreno (aerial photographer/reporter) விமானி George Marciniw மற்றும் விழுந்து விபத்து நடந்த இடத்தில் ஒருவரும் என மூவர் உயிரிழந்துள்ளனர்.
விமானி George Marciniw 14,000 மணி நேரத்திற்கும் மேலாக உலங்குவானூர்திய செலுத்திய அனுபவமுள்ள விமானி என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உலங்குவானூர்தி விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலங்குவானூர்தி விபத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தீயில் 4 வாகனங்களும் 2 சேமிப்பு கொள்கலன்களும் சேதமடைந்தன.
சம்பவத்தையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்து தீயினை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இதேவேளை முன்னதாக நடந்த கார் –Metro பேருந்து விபத்து 2 பேர் உயிரிழந்து 6 பேர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை உலங்குவானூர்தி விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. NTSB மற்றும் FAA விசாரணையை மேற்கொள்கின்றன.
படங்கள் ( Reporter – Eliana Moreno , pilot – George Marciniw)


![]()