பலதும் பத்தும்

இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்

முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுவன் இந்தியாவின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முகநூல் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திப்பதற்காகவே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையிலுள்ள Facebook காதலியைப் பார்க்க #இந்தியாவிலிருந்து படகில் வந்த 14  வயது சிறுவன் ( காதலன்) கைது ! முகனூலில் அறிமுகமான இலங்கை காதலியைப் ...

இலங்கைக்கு வருவதற்கான படகுக் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், சிறுவன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இலங்கைக்கு வந்தபோது சிறுவனிடம் இந்திய நாணயத்தில் 280 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கைக்குள் வந்த சிறுவனை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த தலைமன்னார் நீதிமன்றம், குறித்த 14 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திப்பதற்காக சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *