இலங்கை
நாட்டைவிட்டு ஓடிய மஹிந்த பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ; சம்பந்தியும் ஓட்டம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
ஷிரந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையில் நாட்டைவிட்டு வேளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()