உலகம்

மக்களின் மனங்களை வென்றெடுப்பாரா புட்டின்? – ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்

ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் உக்ரைன் போர் குறித்த மக்களின் மனநிலையை அளவிடும் வகையில் ரஷ்யா இந்த வாரத்தில்  நாடாளுமன்ற தேர்தலை  நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தேர்தல் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தேக்கம் மற்றும் உக்ரைனின் தீவிரமடைந்து வரும் பதிலடித் தாக்குதல்களால் சில ரஷ்யர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அத்துடன், தேர்தலுக்குப் பிறகு புதிய வீரர்களைப் பெருமளவில் போருக்கு அனுப்பும் உத்தரவை புதின் பிறப்பிக்கக்கூடுமோ என்ற அச்சமும் சில தரப்பினரிடையே நிலவுகிறது.

செப்டம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தல், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் தேர்தலாகும்.

மேலும், 2024-ல் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது நாடு தழுவிய தேர்தலும் இதுவேயாகும்.

ரஷ்ய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் சில பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *