உலகம்

மெக்சிகோவை நியூ அமெரிக்கா என மாற்றி வரைபடம்!

நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் “மெக்சிகோ” என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக “அமெரிக்கா” எனக் குறிப்பிட்டு “நியூ அமெரிக்கா” என மாற்றி வரைபடம் ஒன்றை அமைத்துப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.

இந்த வரைபடத்தின் புகைப்படம் வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது. தனது பதிவில்,

நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்
“வாக்குப்பதிவு முறைகேடுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்ற வேண்டும் என பலர் பரிந்துரைத்தனர். மக்களுக்கு இது மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோ மாநிலத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஆளுநர் மிஷெல் லூஜான் கிரிஷாமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியின் தனிப்பட்ட நிர்வாக உத்தரவால் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது.

2025 ஜனவரியில் இதனை “அமெரிக்க வளைகுடா” என பெயர் மாற்ற உத்தரவிட்டார். கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், எல்லைப் பகுதியான ஒன்டாரியோ ஏரியை “லேக் அமெரிக்கா” என மாற்ற உத்தரவிட்டார்.

அமெரிக்க புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பின் உத்தியோகபூர்வப் புதுப்பிப்பைத் தொடர்ந்து, கூகிள் மேப்ஸ் மற்றும் ஆப்பிள் மேப்ஸ் ஆகியவை அமெரிக்க பயனர்களுக்கு ‘லேக் அமெரிக்கா’ மற்றும் ‘அமெரிக்க வளைகுடா’ என மாற்றிக் காண்பிக்கின்றன. எனினும், கனடா மற்றும் பிற நாடுகளில் பழைய பெயர்களே காண்பிக்கப்படுகின்றன.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப்பின் மக்கள் ஆதரவு வீதம் 33 சதவீதமாக குறைந்துள்ள காலகட்டத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *