அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு இன்று வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்குஇடையூறு ஏற்படுத்திய குற்றச்ச் சாட்டில் நேற்று திங்கட்கிழமை கைதான மங்களாராமய விகாரையின் விகாராதிகாரி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து இது குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அம்பிட்டிய சுமணரத்ன தேரர். சென்றிருந்த நிலையில் அவரை மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸசார் கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்ட தேரருக்கு எதிராக அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஏற்கனவே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமை தொடர்பில் அவரை கைது நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்
குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கிற்கு ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையில் விடுவித்ததோடு சுரங்க பணியகத்தில் அரச அதிகாரிகளுக்கு கடமையை செய்யாது இடையூறு விளைவித்த சம்பவத்தில் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
![]()