இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவையை கொடியசைத்து உத்தியோகப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
வடக்கு ரயில்வேயின் 89 கி.மீ நீளமுள்ள ஜிந்த்-சோனிபட் (Jind-Sonipat) வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள இந்த ரயில், உலகின் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னல்களில் ஒன்றில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் போக்குவரத்து முறையின் சாத்தியக்கூறுகளை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும்.
வழக்கமான டீசல் ரயில் என்ஜின்களைப் போலன்றி, இந்த ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களைப் பயன்படுத்தித் தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தானே உற்பத்தி செய்துகொள்கிறது.
இந்த அறிமுகத்தின் மூலம், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் போக்குவரத்தை ஆராய்வதில் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இணைகிறது.
![]()