கட்டுரைகள்

போலியானவற்றையும் மூட நம்பிக்கைகளையும் விலக்குதல் பொருத்தம்… சின்னத்தம்பி குருபரன்

சமய நம்பிக்கைகள், மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியன ஒருவர் தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களாகும். இவற்றுக்கூடாக மனிதனுக்குத் தேவையான ஒழுக்க, விழுமியங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. இவை மக்கள் மத்தியில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டும் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டும் வருகின்றன. அவற்றுள் சிலவற்றை ஏன், எதற்கு எனத் தெரியாமலே பின்பற்றி வருகின்றனர். அவற்றுள் பல போலிகளும் மூட நம்பிக்கைகளும் நிறைந்தவை. அவரும் செய்கிறார். இவரும் செய்கிறார், நானும் செய்கிறேன். அவரும் போகிறார் நானும் போகிறேன் எனப் பலர் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் போல, ஒப்ப மனம் போன போக்கில் வாழ்க்கையை நடாத்துகின்றனர். இன்னும் சிலரி விதியின்மீது பழியைப் போட்டுச் செல்கின்றனர். மெஞ்ஞான வாழ்க்கைக்குள்ளே விஞ்ஞானமும் பகுத்தறிவும் கலந்திருக்கிறது என்பதைப் பலர் மறந்த விடுகின்றனர். மனிதனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறி, உண்மையை உணர்ந்து வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துவதற்காகவே மனிதனுக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனாம், நாம் உண்மை எது, போலி எது என்பதை உணர்ந்து கொள்ளாமல் பெரும்பாலானோர் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றனர்.

புனிதமான, பெறுமதியான வாழ்க்கையை வாழ்வாங்கு வாழாமல் நம் முன்னோர் வாழ்ந்து காட்டிய நல்ல பாதையை மறந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மாயமான வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் நாம் வாழ்ந்தோம் என்ற சில சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். நமது வாழ்க்கை கல்லறையிலும் வாழும் சரித்திரமாக அமைய வேண்டும். தூற்றுவதாக அமைந்து விடக்கூடாது.‘நிரந்தரமானவன் நான் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலடிக்கு உறுதி சேர்ப்பது போல் வாழ்க்கையை வாழ்ந்து மறைய வேண்டும். ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை’ என்ற கவிஞரின் பாடலடியும் நிமிர்ந்து, துணிந்து சென்று உறுதியோடு வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கின்றது.

துன்பம், துயரம், கஷ்டம், நஷ்டம் இல்லாதது வாழ்கை அல்ல ‘நீ எத்தனை தடவை விழுந்தாலும் அத்தனை தடவையும் பிறரின் உதவியை எதிர்பார்க்காது நீயாகவே எழுந்திருக்கக் கற்றுக்கொள். அப்போதுதான் நீ உரிய இலக்கை அடைவாய். இதிலிருந்து பின்வாங்கினால் வாழ்க்கையில் தோல்வியடைவாய். இதற்குள் பலவீனமும் மூடநம்பிக்கையும் கலந்திருந்தால் வெற்றி என்பதே வாழ்வில் கிடைக்காது போய்விடும்’ இதுதான் உண்மை என்பதை மறந்து விடாதீர்கள்.
நமது வாழ்க்கையில் பூசை, புனஸ்காரங்கள், கிரியைகள், சமய, சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வருகிறோம. இவற்றுக்குள்ளே பல மூடநம்பிக்கைகளும் கலந்திருக்கின்றன. ஒருவரின் பிறந்த திகதி, நேரம், நட்சத்திரம், கிரக நிலை என்பன அவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. இங்கு இராசி, நச்சத்திரங்கள் இருந்த இடத்தில் இருக்க கிரகங்கள் மட்டும் சூரிய மண்டலத்தின் தமது சுற்றுகை, புவிச் சுழர்ச்சி, புவிச் சுற்றுகை என்பவற்றுக்கு ஏற்ப நகர்ந்து கொண்டிருக்கின்றன. கிரக மாற்றங்களின் அடிப்படையில் நமக்கு நற்பலன், தீய பலன்கள் கிடைப்பதாகச் சாத்திரங்கள் கூறுதகின்றன. அதேபோல் நாம் பிறந்த திகதி, நட்சத்திரம், இராசி ஆகியன மாறாதது. அதிலும் பிறந்த திகதியும் நேரமும் முக்கியமானது. இவற்றைக் கவனத்தில் கொண்டே கருமங்களை முன்னெடுக்க வேண்டும். காலம், நேரம் என்பவற்றைச் சரியான முறையில் கணிப்பிட்டுச் சாதக நிலையில் காரியங்களில் விடா முயற்சியோடு ஈடுபட்டால் வெற்றி நமதாகும்.

சைவ சமயத்தவர்கள் பயன்படுத்தும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்கள் இரண்டும் கிரக மாற்றங்களையும் சுப நேரங்களையும் வேறு வேறு நேரத்தில், வேறு வேறு தினத்தில் கிரகங்கள் மாறுவதாகக் கணிப்பிட்ட்டுக் கூறுகின்றன. நமது இரு பஞ்சாங்கங்களும் கணிப்பீட்டு நீதியாகவே மாற்றங்களை உறுதி செய்கின்றன. விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்படாமையினால் கிரக மாற்றங்களில் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. இத்தவறுகள் காரணமாகச் சில சமயங்களில் சுப நேரத்தைக் கணிப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். புவிச் சுழற்சிக்கும் சுற்றுகைக்கும் ஏற்பவும் கிரகங்கள் சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் வலம் வருவதனாலும் ஒவ்வொரு கிரக மாற்றத்துக்குரிய காலங்களும் கணித, விஞ்ஞான ரீதியாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்தக் காலக் கணிபீட்டின் அடிப்படையில் கிரக மாற்றங்கள் நிகழ்கின்றன. கிரக மாற்றம் ஒவ்வொரு கிரகத்துக்குமுரிய சுற்றுகைக் காலம் முடிந்து தான் இருக்கும் இராசியில் இருந்து அடுத்த இராசிக்கு மாறுகின்றன. இந்த மாற்றம் ஒரே நாளில் ஒரே நெரத்தில் மாத்திரம் நிகழலாமே தவிர வேறுபட்ட தினங்களில், வேறுபட்ட நேரத்தில் மாற்றம் ஏற்பட முடியாது என்பதைக் கலனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் பிறக்கின்றபோது குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் ஒரு நச்சத்திரத்தில் பிறந்தோரை அவ்வேனைக்குரிய இலக்கினத்தில் நின்று கொண்டு, அவரின் ஆட்சி வீட்டுக்குரிய கிரகம் ஒன்று ஏனைய கிரகங்களைப் பார்க்கும் பார்வையைக் கொண்டே கிரகசார பலன்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இதன்படி ஒவ்வொரு கிரகங்களும் அவருக்கு நட்பு, ஆட்சி, பகை, நீசம் ஆகியன குறிப்பிட்ட நச்சத்திரத்தில் குறித்த பாதத்தில் பிந்தோருக்குக் கிரக நிலை அமைந்திருக்கும். இதை வைத்துக் கொண்டே ஒவ்வொரு கிரகங்களும் இராசிக்கு இடம் மாறும்போது அவரவர்களின் இராசி பலன்கள் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாகச் சனி பகவானின் ஆட்சி வீடாகிய மகர இராசிக்கு வரும்போது, அதில் இருந்து அடுத்த இராசிக்கு இடம் மாறும்போது அந்த இராசியில் பிறந்தோருக்கு ஏழரைச் சனி தோசம் (இரண்டரை வருடங்களுக்கு) கடைக் கூறாக இருக்கும். இவ்வாறு கிரகங்கள் இராசிகளுக்கு இடம் பெயரும்போது நற்பலன்களையும் தோசங்களையும் கொடுப்பதாகச் சாத்திரங்கள் கூறுகினட்றன. கிரக இடப்பெயர்ச்சி கிரகத்துக்கும் (கோள்) வேறுபட்ட கால வரையறையைக் கொண்டிருக்கும். இதனை வைத்துக் கொண்டு நமது பலவீனத்ததையும் மூட நம்பிக்கையையும் மூலதனமாக்கிப் பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
கிரகங்கள் மாறும்போது குறித்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்குப் பிறந்த திகதிக்குரிய செயற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கும். இதனை தோச நிவர்த்திக் கிரியைகள், அர்ச்சனை, கழிப்பு, தோச, நிவர்த்தி, பூசை, புனஷ்காரம் போன்றவற்றால் தோசங்களைப் போக்கிக் கொள்ளலாம் என நினைப்பதே மூடநம்பிக்கையாகும். சனி தோசம் பிள்ளையாரைத் தவிர ஏனைய தெய்வங்கள் எல்லோரையும் பீடித்து அவர்களை வருத்தி இருககின்றன என்பது ஒரு கதை. இதன் உண்மை, பொய்மை எவருக்கும் தெரியாது.

நமக்குத் தெரியாததை அவர்களுக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு பலரை ஏமாற்றிச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ னெ்பது கீதாசாரம். கிருஷ்ண பகவான் கூறியது. மனிதரால் கூறப்படவில்லை என்கிறது பகவத்கீதை. இறைவன் கிரக மாற்றங்களின் மூலம் மனிதர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து அதிலிருந்து பிறரின் உதவிய்ன்றி எவ்வாறு மீண்டெழுகின்றனர் என்பதைப் பரீட்சித்துப் பார்க்கிறான். கருணைக் கடலாகிய இறைவன் நமக்கு உயிரையும் உடலையும் தந்து, இந்த உலகத்தையும் நமக்காகத் தந்திருக்கிறான். இத்தகைய இறைவனுக்கு நன்றி செலுத்துவதை விடுத்து அதைத்தா இதைத்தா எனக் கையேந்தி நிற்கின்றோம். கொடுக்கல் வாங்கல் செய்பவர் இறைவனல்ல. அவர் கருணைக் கடலாகவும் அடியார்க்கு எழியோனாகவும் விருப்பு, வெறுப்பற்றவராகவும் இருக்கின்றார் எனச் சமய நூல்கள் கூறுகின்றன.
இறைவன் ‘ஆடை, அணிகள் ஆடம்பரங்களை விரும்புவதில்லை. நமது குறைகள், துன்ப, துயரங்களைக் கூறுவதற்காக ஆடை, அணிகள், ஆடம்பரங்களுடன் கோயிலுக்குச் செல்கின்றோம்.

கோயிலை வருமானம் உழைக்கும் நிறுவனங்களாகக் குருக்கள்மாரும் ஆலய நிர்வாகிகளும் மாற்றிவிட்டார்கள. அடியார்கள் கோயிலுக்குக் கொண்டு செல்லும் பூசைப்பெட்டி, நேர்த்திக்கடன், பால்குட பவனி என்பவற்நுக்காக இரசிது கொடுத்துப் பணம் அறவிடுகின்றார்கள். மேடைகளில் பொன்னடை போர்த்துவது போல் பாற்குட பவனியும் வாடிக்கையாகிவிட்டது. ஆலயங்களில் பணம் வசூலிப்பதற்கு அந்தணர்கள் உருவாக்கிய பூசைகள், புனஸ்காரங்கள், கிரியைகள், விழாக்கள் ஆகியன நமது நம்பிக்கை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி நம்மிடம் இருந்து பணத்தை அறவிடுகின்றனர். பல ஆலயங்களில் தெய்வங்கள் ஒலிபெருக்கி மூலம் கூறி விற்கப்படுகின்றன. ஏன், எதற்கு எனக் கேட்டால் இறைவன் திருப்பணி என்பார்கள். கோயில் புனருத்தாரணம், கட்டுமானப் பணிக்குத் தேவை என்பார்கள். விரதம் பிடிப்பதற்குக் காசி, காப்புக் கட்டுவதற்குக் காசி, அலகு போடுவதற்குக் காசி, காவடி எடுப்பதற்குக் காசி, பிரதட்டினை செய்வதற்குக் காசி, தீ மிதிப்பதற்குக் காசி, எண்ணெய்க் காப்புக்குக் காசி, பல ஆலயங்களில் அர்ச்சிக்ப்படாத அர்ச்சனைக்குக் காசி என ஆலயங்களில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. பணம் உழைக்கும் நிறுவனங்களாக கோயில்கள் மாறிவிட்டன. இதனை ஏனைய சமயத்தவரின் வணக்கத் தலங்களில் காணமுடியாது.

நாட்டில் வறுமை தலைவிரித்தாடும் நிலையிலும் ஆலங்களில் ஆடம்பரங்களுக்கு மாத்திரம் குறையவில்லை. அப்பியாசக் கொப்பி, பென்சில், பென், அழி இறப்பர், சூ, சொகஸ், உடுப்புத் துவைக்கச் சவர்க்காரம், தலைமுடி வெட்டப் பணம் இல்லாமல் 30 வீதம் வரையான பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இந்த ஆடம்பரச் செலவுகளில் குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து அல்லது பொருட்களை வழற்கிப் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பிவைக்கலாம். ‘மக்கள் சேவைதான் மகேசன் சேவை’ என்பதனை மறந்து போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தான் வருவார்’ என்பது சிவஞான சித்தியார். நாம் எந்தத் தெங்வத்தை வழிபட்டாலும் அங்கு சிவபெருமான் வந்து அருள் பாலிப்பார் என்பது இதன் கருத்தாகும். அதை விடுத்து ஊருக்குப் பல கோயில்களைக் கடடி மக்களுக்குச் சுமையைக் கூட்டி இருக்கின்றனர். மக்களின் வருமானம் குறைந்து வறுமையில் வாடுகின்ற போது கோயில் கட்டுதல், கும்பாபிசேகம், சங்காபிசேகம், திருவிழாக்கள், பிரதிஸ்டைகள், விசேட பூசைகள், விரதங்கள் எனச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சில விதங்களும் செயற்பாடுகளும் கேலிக் கூத்தாகிவிட்டன. கேதார கௌரி விரதம், திருவெம்பாவை விரதம் ஆகியன திருமண வயதை எய்திய பெண்கள் தனக்கு நலல ஆடவன் ஒருவன் கணவனாக அமைய வேண்டும் என்பதற்காகவே இவ்விரதங்கள் பிடிக்கப்படுகின்றன. ஆனால் இவ்விரதங்களை ஆடவர்கள, திருமணமாகிய பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் அனுட்டிக்கின்றனர். எதை எதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற தெளிவில்லாமல் அவரும் செய்கிறார் நானும் கெய்கிறேன் எனப் பகட்டுக்காகச் செய்வதுபோல் பலர் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதைப்பற்றித் தெளிவுபடுத்துவதற்கு யாரும் தயாராக இல்லை. தெளிவுபடுத்தினால் ஆலய வருமானம் குறைந்துவிடும்.
மாணிக்கவாசக சுவாமிகள் அதிகாலையில் எழுந்து தன்னைப் பெண்ணாகப் பாவனை செய்து தினமும் திருவண்ணாமலைத் தீர்தத்தில் தீர்த்தமாடித் திருவெம்பாவை பாடி விரதத்தை அனுட்டித்தார் என்பதை அறிகின்றோம். அவர் தன்னிலையில் இருந்து கொண்டு வழிபடவில்லையே. தன்னையும் ஒரு பெண்ணாகப் பாவனை செய்து, நீராடி விரதத்தை அனுட்டித்தார். நமது சைவ நெறியில் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நினைத்து விரதமிருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதை விடுத்து எல்லோரும் எல்லாத் தெய்வங்களையும் நினைத்த விரதமிருக்கிறோம்.

அதேபோல் கருப்பையில் கருவொன்று உருவாக வேண்டும் என்பதற்காகத் திருமணமாகிய பெண்கள் மடிப்பிச்சை எடுத்தார்கள் என முன்னோர் சம்பிரதாயம் பற்றி அறிகிறோம. பின்வந்தவர்கள் நடைமுறையை மாற்றிச் சிறு பிள்ளைகள், வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோரும் மடிப்பிச்சை எடுக்கின்றனர். மடியில் எடுத்தால் மடிப்பிச்சை, கௌரவத்துக்காகத் தலையணை உறை, பைகளில் பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயராம். சாதாரண ஆடை அணிந்திருந்தல் மடியில் பிச்சை எடுக்கலாம். விலை உயர்ந்த பட்டுச் சேலை அணிந்து அதில் மடிப் பிச்சை எடுக்க முடியுமா?, சேலையைக் கழுவத்தான் முடியுமா? கௌரவம் என்னாவது. எல்லாமே போலிதான். அதனால்தான் வேண்டுதல் பெரும்பாலும் பலிபதில்லை.
‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன’ என்பார்கள். ‘தாரமும் கல்வியும் தலைவிதிபடபடி’ என்பார்கள். சிலருக்கு அவ்வாறு அமையாது வற்புறுத்தலின் பேரில் அமைகின்றன.

நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை அமைவதற்கு எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் பல வருடம் வாழப் போகின்ற வாழ்க்கையை நின்று, நிதானித்துத் திட்டமிட்டுப் பெரியோர் ஆசீரிவாதத்துடன் சிறப்பாகச் சேய்து முடித்தல் வேண்டும். பெற்றோரும், குறிப்பிட்டவர்களும் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டுப் பட்டம், பதவி, கௌரவம் என்பன பாரத்துச் சீதனம் கொடுத்துப் பெரும் செலவு செய்து திருமணத்தைச் செய்து முடிக்கினறனர். விதிக்கப்பட்டதுதான் திருமண வாழ்க்கை என்பதை மறந்து பலர் படுகுழியில் வீழ்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். தாரமும் கல்வியும் தலைவிதிப்படி அல்லாமல் வேறு எந்த வழியிலும் அமையாது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அரமைந்தால் அது நிலைத்திருக்காது. அவ்வாறு அமைந்த வீடுகளில் தினமும் போராட்டமே நடைபெறும்.

‘இன்னார்க்கு இன்னாரென்று எமுதி வைத்தானே தேவன் அன்று’ என்பதற்கிணங்க பொறுமைகாத்து திருமணத்தைச் செய்து வைக்க வேண்டும்.
6, 15, 24 ஆந் திகதிகளில் பிறந்தோர், மகர இராசி, செவ்வாய், சனி தோசமுள்ளோர் ஆகியோருக்குத் திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதனால் மிகச் சரியாகப் பொருத்தம் பார்த்துப் பேசிப் பழகித் திருமணம் செய்து வைக்கப்படாவிட்டால் அத்திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும். அவர்களுக்குப் பொருத்தம் பார்க்கும் போது ஜாதகக் குறிப்புகள். பெண்ணின் ருது சாத்திரக் குறிப்புகள், எண்சாத்திரம், இரேகை சாத்திரம் ஆகியவற்றைப் பார்த்துத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிறந்த குறிப்பு, எண் சாத்திரம் ஆகியவற்றில் கூறப்படாத சில விடயங்கள் உடல் கூற்று ரீதியாக அமைந்த கை இரேகைகளில் காணப்படலாம். அவற்றையும் பார்த்துத் தெரிந்து கொண்டு நிச்சயம் செய்வது பொருத்தமானதாக அமையும்.

ஒருவரின் திருமணத்துக்குக் காரணமாக இருப்பது செவ்வாய்க் கிரகம் என்கின்றது சாத்திரம்.
மிக மிகச் சரியாகக் கணிப்பிட்டு எழுதப்பட்ட ஜாதகக் குறிப்பின்படி செவ்வாயின் கிரகசார பலன் ஆட்சி, நட்பாக இருந்தால் விரைவில் அவருக்குத் திருமணம் நடக்கும். நீசமாக இருந்தால் தாமதமாகும். பகையாக இருந்தால் செவ்வாய் தோசமாகும்.

இத்தகையவர் உடல் வெப்பம் கூடியவராக இருப்பார். செவ்வாய் தோசம் உள்ள ஒருவருக்குத் தோசமில்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொடுத்தால் தோசமுள்ளவரின் வெப்பம் தோசமில்லாதவரைத் தாக்கிக் கொன்றுவிடும். ஆகவே, செவ்வாய் தோசம் உள்ளவருக்குத் அத்தோசம் உள்ள ஒருவரைத் திருமணம் செய்து கொடுப்பதே சிறந்தது. இவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியத்தக்கான வாய்ப்பும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனை விடுத்துத் தோச நிவர்த்தி செய்து மாற்றம் ஏற்படப் போவதில்லை.

நமது பலவீனத்தை அறிந்து சிலர் பணம் சம்பாதிக்க முயற்சிக்கலாம். இவ்வாறுதான் ஒவ்வொரு இராசிக்கும் பிறந்த எண்களுக்கும் சில பரிகாரங்கள் சாத்திர முறைப்படி
புத்தி சாதுரியமாக அவற்றைக் கணக்கில் எடுக்காது மனம் போன போக்கில் அவசரப்பட்டுத் திருமணம் என்னும் ஆயிரம் காலத்துப் பயிரை கேள்விக்குறி ஆக்கி விடக் கூடாது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எண் சாத்திரப்படி ஒரே இலக்கத்தில் பிறந்தவர்களை முடிந்தவரை திருமணம் செய்து வைப்பதைத் தவர்த்துக் கொள்ள வேண்டும். இதனைப் புத்திசாதுரியமாக அணுகாது திருமணம் செய்து வைத்த பின்னர் வரும் பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் என்பவற்றைச் சமாளிக்க முடியாமல் சாத்திரிமார், கோயில் என்று அலைந்து திரிவார்கள்.

அதனால் ஆகப்போது ஒன்றுமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை நமது பிறப்போடு சம்பந்தப்பட்டு விதிக்கப்பட்டவை. அதனால் ஒவ்வொரு கருமங்களையும் வருமுன் காப்போம் என்றவாறு நமது செயற்பாடுகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவதே சிறந்தது. இதை விடுத்துப் பில்லி, சூனியம், கழிப்பு, பேய், விசாசு, அந்தப் பார்வை, இந்தப் பார்வை எனப் பணத்தைக் கொட்டி அலைந்து திரிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூட நம்பிக்கைகளால் பணம், சொத்து இழப்பு மாத்திரமின்றிப் பல உயிர்களும் பறிபோய் இருக்கின்றன.

நாம் செய்த பாவத்துக்குரிய தண்டனை என்றோ ஒரு நாள் நமக்குக் கிடைத்தே தீரும். அதனை கடவுள் மற்றும் எவராலும் தடுத்துவிட முடியாது. கோயில், குளம், செல்வதனாலும், தீர்த்தமாடுவதனாலும், பாவ மன்னிப்புக் கேட்பதனாலும், அன்னதானம், கிரியைகள், பூசை, புனஸ்காரம் செய்வதனாலும் தீர்த்துவிட முடியாது. ‘எவருக்கு நீ பாவமிழைத்தோமோ அவரால் மட்டுமே உனக்கு பாவ மன்னிப்பு வழங்க முடியுமே தவிர வேறு எவராலும் பாவ மன்னிப்பு வழங்க முடியாது. நீ செய்த பாவத்துக்குரிய தண்டனையை நீயே அனுபவித்தாக வேண்டும். அதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பது கௌதம புத்தரின் வாக்கு. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது இதனையே உணர்த்துகிறது.
நமது வாழ்க்கை நம் கையில்தான் இருக்கின்றது. நமது வாழக்கையை ஆற, அமரச் சிந்தித்து நாமே தீர்மானிக்க வேண்டும். மூன்றாம் நபர் நமது வாழ்க்கையைத் தீர்மானித்தால் நமது வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும். நமது குடும்பத்தார், நெருங்கிய உறவினர்களோடு கலந்துரையாடித் தக்கபடி தீர்மானித்துக் கொள்வதே மேலானது. இதனையெ நமது முன்னோர் ‘பதறாத காரியம் சிதறாது’ எனக் கூறி வைத்தனர்.

நமது பண்பாடு பாரம்பரியம் எனக் கூறியும், விழாக்கள், வைபவங்கள் என்றும் பெரும்பாலான மக்களை ஒரு எல்லைக்கு அப்பால் செல்லவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்குப் பஞசாங்கங்கள் வருடத்தில் 150 க்கு மேற்பட்ட நாட்களை விரதம், விழாக்கள், சுபமுகூர்த்தம், திதி, விசேட தினங்கள், சுப நேரம், எமகண்டன், குழிகன், சாந்தி, பரிகாரம் என்று மக்களை அலைக்கழிப்பதோடு, வீண் செலவுக்கும் வழிவகை செய்திருக்கின்றன. இந்தச் சிரமங்கள், வீண்செலவுகள் ஏணைய மதத்தவருக்குக் கிடையாது.
பண்பாடு, பழக்க வழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள் எல்லாமே செலவுக்கே வழிவகுத்திருக்கின்றன. தை மாதம் முதல் மார்கழி வரை ஏதோ ஒரு கோயிலில் ஏதோ ஒரு நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதேபோல் வீட்டிலும் பிறந்தது முதல் இறக்கும்வரை அன்றாட உணவு, மருந்து போன்ற அத்தியாவசியச் செலவுகளைவிட எத்தனையா ஆரடம்பரச் செலவுகள் நடற்து கொண்டே இருக்கின்றன. சாதாரண விடயங் எல்லாவற்றையும் ஆடம்பரமாக்கிவிட்டனர். வீட்டில் நமது சம்பிரதாய முறைப்படி செய்ய வேண்டிய நிகழ்வுகள் பலவற்றை ஆகம மயமாக்கி ஐயரைக் கொண்டு பெரும் செலவு செய்து காரியத்தை நிறைவேற்றும் பழக்கத்தக்கு மாறிவிட்டனர். பத்ததி முறையில் அமைந்த வழபாட்டிடங்களை ஆகம முறைப்படி கோயில் கட்டி ஆகம முறையிலான வழிபாட்டிடங்களாக மாற்றிவிட்டனர்.

அதனால் முரண்பாடு, சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுப் பல ஆலயங்கள் நீதி மன்றங்களில் நிற்கின்றன. படிப்படியாக நமது தூய்மையான சமய, சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறன. இதெல்லாம் ஏன் எதற்கு எனக் கேள்வி கேட்காமல் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button