இலங்கை

“கொமாண்டோ” பங்களா முன்பாக மீண்டும் தொடர்ச்சியான போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக வெள்ளிக்கிழமையும்(19) தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.

இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button