உலகம்

கனடாவில் பொது வெளியில் அச்சுறுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் – பெண்ணுக்கு நேர்ந்த கதி

கனடாவில் பெண் ஒருவரை பொது வெளியில் வைத்து தாக்கியதுடன் அநாகரியமாக நடந்து கொண்ட இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான திருக்குமரன் கந்தசாமி என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

டர்ஹாம் பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் ஸ்காபுரோவில் பயணித்துக் கொண்டிருந்த டர்ஹாம் பேருந்தில், வெறுப்புணர்ச்சி தூண்டப்பட்டதாக இலங்கையர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பேருந்தில் இருந்த போது பாதிக்கப்பட்டவரை அணுகி, பல இழிவான, மதவாத எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாகவும், சிறிது நேரம் கழித்து பேருந்திலிருந்து இறங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் காணொளியில் பதிவு செய்யப்பட்டு, கனடிய முஸ்லிம்களின் தேசிய சபையால் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது.

சந்தேக நபர் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். அவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button