ஒரு வாரம் துளசி இலைகளை சாப்பிடுங்க!; இந்த ந்னமைகள் கட்டாயம் கிடைக்கும்?

மழைக்காலம் நெருங்கிவிட்டது. இந்தப் பருவத்தில், பெரும்பாலான மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.
பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பானது, சளி மற்றும் இருமல் மட்டுமல்லாமல், செரிமானக் கோளாறு, தோல் நோய்த்தொற்றுகள், ஒவ்வாமைகள் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, துளசியின் நன்மைகளையும், அதை வெறும் ஏழு நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பதிவில் பார்க்கலாம்.
துளசி உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி ஆகியவையும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்களும் அதிக அளவில் உள்ளன.
மேலும், இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. ஏழு நாட்களுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் நான்கு முதல் ஐந்து துளசி இலைகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேறு பல நன்மைகளையும் அளிக்கிறது.
துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன.
இந்த சேர்மங்கள், அபாயகரமான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகின்றன.
துளசியை உட்கொள்வது சில நாட்களுக்குள் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளைக் குறைக்கும்.
துளசி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும்போது, இதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு உட்கொள்வது, தூக்கத்தை மேம்படுத்தி, மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.
துளசி இலைகளைச் சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இது செரிமான நொதிகளைத் தூண்டி, வாயு மற்றும் வயிறு உப்புசத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள லேசான நச்சு நீக்கும் பண்புகள், சிறுநீரகங்களையும் கல்லீரலையும் வலுப்படுத்த உதவுகின்றன.
![]()