இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இம்முக்கிய மனு 18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் முதன்முறையாகப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த ஒத்திவைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருதரப்பு முதற்கட்ட சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதியரசர்கள் ஆயம், வழக்கின் தன்மையைக் கருத்திற்கொண்டு இதன் மேலதிக விசாரணைகளையும், இறுதித் தீர்மானத்தையும் எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button