இலங்கையில் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணி; சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவிப்பு

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் இனங்காணப்பட்டுள்ள மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ளது.
இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட புதைகுழியாக காணப்பட்டது.
இந்நிலையில் செம்மணியில் நேற்றைய தினத்துடன் 380 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 362 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
செம்மணி மனித புதைகுழி பாரிய சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன் பரவலான அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது எனவும் விசாரணைகளின் பின்னரே இது சம்பந்தமான முடிவுகளை எடுக்க முடியும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
![]()