இலங்கை

இனப்படுகொலையை மறைக்கத் துடிக்கும் பேராயரின் ஊடகப் பேச்சாளர்! எழுந்த கண்டனம்

இலங்கையின் பேராயர் மல்கம் ரஞ்சித்தினுடைய ஊடகப் பேச்சாளர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை அல்ல அது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் எனவும் அதிலே பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டார்கள், அத்தோடு பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற கருத்திற்கே தமது கண்டனங்களை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், கபிதா வசந்தன் அடிகளார், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் இரத்தினசிங்கம் முரளீதரன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநரும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், குரலற்றோரின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான இன்பநாயகம் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட வடக்கு கிழக்கிலிருந்து பல்வேறு பொது அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button