பௌத்த பிக்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல்; சம்பிக்க கூறுகிறார்

பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விமர்சனங்களால் பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
.பல்லேகல ஹேமரத்ன தேரர் விவகாரத்தை தொடர்ந்து புத்தசாசனத்தையும், பிக்குகளையும் அவமதிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது இந்த செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. அந்த விவகாரம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு விடயத்தை கொண்டு ஒட்டுமொத்த புத்தசாசனத்தையும் மலினப்படுத்த இடமளிக்க முடியாது.
புத்தசாசனம் இல்லாதொழிந்தால் இந்த இராச்சியம் மிக மோசமாக பாதிக்கப்படும். பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தன்மை ஏற்பட்டுள்ளது . ஆகவே புத்தசாசனம் மற்றும் பிக்குகளின் பாதுகாப்பு குறித்து மகாநாயக்க தேரர்களுடன் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம் என்றார்.
![]()