இலங்கை

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக சவப் பெட்டி,மலர் வளையத்துடன் பேரணி; பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் கொழும்பில் மத்திய வங்கிக்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை பதற்றமான நிலையை ஏற்பட்டிருந்தது.

பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்ததுடன், சவப் பெட்டி மற்றும் மலர் வளையம் ஆகியவற்றையும் அவர்கள் மத்திய வங்கிக்கு முன்னால் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சணச வங்கியினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

29.000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய வங்கி ஆளுநர் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக சென்று மத்திய வங்கிக்கு முன்னால் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது அவர்கள் மத்திய வங்கி ஆளுநரின் உருவப்படுத்துடன் சவப்பெட்டி மற்றும் மலர்வலயத்தை அவ்விடத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வேளையில் அவர்கள் மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முயன்ற போதும், பொலிஸார் அவர்களுக்கு உள்ளே நுழைய முடியாதவாறு தடுப்புக் காவல்களை ஏற்படுத்தியிருந்தனர். இதேவேளை மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சென்றும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button