பிணைமுறி மோசடி பணத்தில் ஐ.தே.க செய்த தேர்தல் பிரசாரம்: கசிந்த பரபரப்பான தகவல்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் கிடைக்க பெற்ற பணம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக பரபரப்பான ஒரு தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் வெலிகம அமைப்பாளர் ரேஹான் விஜேவிக்கரம தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம ரேஹான் விஜேவிக்கரமவுடன் நடத்தி செவ்வியில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.அந்த செவ்வியில் அவர் மேலும் இது தொடர்பில் தெரிவித்த கருத்து,
2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல்
2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் வெலிகம நகரசபைத் தலைவராக நான் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டேன்.
அந்த நேரத்தில் பைகளில் அல்லவா கொண்டு வந்து எமக்குப் பணம் தந்தார்கள். எமது கட்சி தலைமை அலுவலகங்களுக்கு சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் வந்து மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அலுவலகத்திற்கு அது கொடுக்கப்பட்டது.
ஆனால் மங்கள சமரவீர அதனை நிர்வகிக்கவில்லை. அது ‘சிறிகொத்த’ மூலமே நிர்வகிக்கப்பட்டது. இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்கள் (28 மாநகரசபைகள் 36 நகரசபைகள் 275 பிரதேச சபைகள்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 8793 ஆகும்.
ஆனால் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை அதிவிட அதிகமாகும். முழு இலங்கையிலும் உள்ள ஐக்கி தேசிக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம்
எனக்கு சரியாக நினைவில்லை எனக்கு கிடைத்தது பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். பட்டியலில் இருந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் கிடைத்தது. அதாவது அனைத்து கட்சி அலுவலகங்களின் தலைமை அலுவலகங்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது.
இதனை நான் மட்டும் கூறவில்லை இது தொடர்பில் ஜெகத் விதானகேவும் தெரிவித்துள்ளார். அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் அலோசியஸ் ஆகியோருடைய பணம் தான் அது.
முடிந்தால் என்னை நீதிமன்றத்திற்கு அழைக்கவும். உண்மையைத்தானே கூறுகிறேன் எதற்கு பொய் சொல்ல வேண்டும்?
அதாவது இது சிறிகொத்தவில் இருந்துதான் விநியோகிக்கப்பட்டது. சிறிகொத்தவின் அறைகளில்தான் பணம் வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்துதான் பணம் தயார் செய்யப்பட்டது. கட்சியின் பிரதிநிதி ஒருவர் வந்துதான் கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நினைவிருக்கும் வகையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொடுத்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தனிக்குழு இருந்தது. எங்களை இந்த உட்புற வேலைகளுக்கு சேர்க்கவில்லை. அது பிணைமுறி பணம் என்று நான் தெரிந்து கொண்டது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்த பிறகு தான்.
![]()