பலதும் பத்தும்

மொறு மொறு சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூ வடை!

எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய காய்கறிகளின் பட்டியலில் வாழைப்பூ நிச்சயம் முக்கிய இடம் வகிக்கின்றது.

வாழைப்பூவில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துகள் செரிந்து காணப்பட்டாலும், அதனை சுத்தம் செய்து நறுக்கி எடுப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால் பெரும்பாலானவர்கள் இதனை தங்களின் சமையல் மெனுவில் இருந்து தவிர்த்து விடுவார்கள்.

மொறு மொறு சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூ வடை! பண்ணலாமா? | Healthy Banana Flower Vada Recipe In Tamil

வாரத்துக்கு ஒருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும் நமக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூவை கொண்டு அசத்தல் சுவையில் மொறுப்பான வடை செய்யும் எளிய முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வாழை பூ

கடலை பருப்பு

சோம்பு பட்டை கிராம்பு

பூண்டு

காய்ந்த மிளகாய்

கருவேப்பிலை

பச்சைமிளகாய்

உப்பு

பெருங்காயப் பொடி

கொத்தமல்லி

பெரிய வெங்காயம்

எண்ணெய்

மொறு மொறு சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூ வடை! பண்ணலாமா? | Healthy Banana Flower Vada Recipe In Tamil

செய்முறை

முதலில் வாலைப்பூவினை தண்ணீரில் கழுவி பூவினை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கடலைப்பருப்பினை ஊற வைத்து எடுத்து கொண்டு அதனை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். (வடை சுடுவதற்கு ஏற்ற பதத்தில்)

மொறு மொறு சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூ வடை! பண்ணலாமா? | Healthy Banana Flower Vada Recipe In Tamil

அதனையடுத்து அதனுடன் சோம்பு, பட்டை, கிராம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்ததுடன்  கலவையுடன் கடலை மாவு அரைத்து வைத்ததை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

மொறு மொறு சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூ வடை! பண்ணலாமா? | Healthy Banana Flower Vada Recipe In Tamil

பின்னர் அதனுடன் பெருங்காயப் பொடி, கொத்தமல்லி, நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வடையாக தட்டிக் கொண்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒன்றன் பின் ஒன்றாக வடையினை சுட்டு எடுத்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரும் அசத்தலான வாழைப் பூ வடை தயார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button