வரலாற்றில் முதன்முறை தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்!

தமிழக வரலாற்றில் முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர் எம்எல்ஏவாகி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தவெக வேட்பாளர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் கடந்த 2016, 2021 ஆகிய தேர்தலில் திமுக சார்பில் கே சுந்தர் என்பவர் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து இந்த முறை தவெக சார்பில் முனிரத்னம் என்பவர் களமிறங்கினார்.
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மகேஷ் குமார் போட்டியிட்டார்.
இதில் தவெக வேட்பாளர் முனிரத்னம் மாற்றுத்திறனாளி ஆவார். மாற்றுத்திறனாளியை என்பதை தாண்டி விஜய் அவருக்கு சீட் வழங்கியது மட்டுமல்வாது தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று தேர்தல் முடிவு வெளியான நிலையில் உத்திரமேரூர் தொகுதியில் முனிரத்னம் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 84,917 ஓட்டுகள் வாங்கி வாகை சூடினார்.
திமுக சிட்டிங் எம்எல்ஏவான சுந்தர் 70,694 ஓட்டுகள் பெற்று 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு பாமக வேட்பாளர் மமேஷ் குமார் 62,809 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.
தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி
நாம் தமிழர் கட்சி சார்பில் மாறம் மாசிலாமணி 5,783 ஓட்டுகள் வாங்கி 4வது இடம் பிடித்தார். தமிழகத்தை எடுத்து கொண்டால் மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எம்எல்ஏவானது கிடையாது.
இதன்மூலம் முனிரத்னம் தான் தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவர் விஜய்யின் மக்கள் இயககத்தில் 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார் . 50 சதவீதம் உடல் குறைபாடு கொண்டவர். இதனால் ‘கேலிபர்ஸ்’ அணிந்து இருப்பார்.
தற்போதைய தேர்தல் வெற்றி பற்றி முனிரத்னம் கூறுகையில்,, ”எங்களின் உத்திரமேரூர் தொகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.
இதனை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுவேன். அவர்களுக்கு தேவையான கேலிப்பர்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்குவேன்” என குறிப்பிட்டார்.
![]()