பலதும் பத்தும்

மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்!

எல்லோரும் வாழ்வில் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், மகிழ்ச்சிக்குமான மந்திரங்கள் ரகசியமானவை அல்ல, எளிமையானவை.

அவற்றில் சில இதோ,

எப்போதும் முதலில், உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம்.

உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசை கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, தொழில் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்வேன் என்று உங்களுக்கு நீங்களே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

யாரையும் வருத்தப்பட வைக்காதீர்கள், வார்த்தைகளால் கூட.

சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி.

பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

ஒருவர் நல்லது செய்யும்போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்து விடாதீர்கள்.

உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு என்று உணர்ந்து நடங்கள்.

தவறான வழியில் செல்லாதீர்கள்.

எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

சொன்ன வாக்கை மீறாதீர்கள். நிறைவேற்றுவது கடினம் என்று தோன்றினால், வாக்குக் கொடுக்காதீர்கள்.

‘சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வெட்டியாய் பொழுதைக் கழிப்பதைத் தவிருங்கள்.

வருடத்துக்கு ஒரு புதிய மென்திறனாவது கற்றுக் கொள்ளுங்கள். நம்மை விடச் சிறியவரிடமும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை.

கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவர் போல் வாழ வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் பாடம்தான். சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்தான்.

அடுத்தவர்களுடைய மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்கள் நலத்தையும், உங்கள் வசதியையும் மட்டுமே முன்னிறுத்தாதீர்கள்.

இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளிக் கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும் போது சிறிதும் கிள்ளிச் செல்ல முடியாது.

நம்பிக்கைதான் வாழ்க்கை. எப்போதும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நாளையே எல்லாம் மாறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button