இந்தியா

வேதாந்தா கொதிகலன் வெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் (Boiler) வெடிப்பு விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி (Sakti) மாவட்டத்தில் உள்ள வேதாந்தா வெப்ப மின் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கொதிகலன் வெடிப்பு விபத்து, மாநிலத்தின் மோசமான தொழில்முறை விபத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 12 தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சக்தி மாவட்ட ஆட்சியர் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விபத்திற்கு யார் காரணம் என்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனித உயிர்களின் இழப்பை எதனைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *