நிகழ்வுகள்

போதைப்பொருள் ஒழிப்பு, ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு!

திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு, ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு 16.04.2026 (வியாழக்கிழமை) மாங்காயூற்று முதியோர் சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் பிலிப்ஜோன் விஷோபா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இச்செயலமர்வில், வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன், வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர் மற்றும் வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன், கவிஞர் தில்லைநாதன் பவித்ரன், சட்டத்தரணி ஷிறோமி ரவீந்திரராஜா ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்று தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில், மாங்காயூற்று, கன்னியா பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *