விரல் அளவே இருக்கும் பாம்பு… 20 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், கை விரல் அளவுக்கு இருக்கும் பாம்புகளைக் கண்டால் பயத்துக்கு பதில் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
விரல் அளவு பாம்பா? அது எப்படி என்றுதானே சிந்திக்கிறீர்கள்…பார்படோஸ் நூல் எனப்படும் உலகில் மிகச் சிறிய வகை பாம்பொன்றை கரீபியன் தீவிலுள்ள காட்டில் பாறைகளுக்கடியில் கானர் பிளேட்ஸ் எனும் விஞ்ஞானியொருவர் கண்டுபிடித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் இப் பாம்பினம் விஞ்ஞானிகள் கண்ணில் தென்பட்டுள்ளது. இதனை வெறும் கண்ணால் பார்க்கக்கூட முடியாத அளவு இப் பாம்பு காணப்பட்டதால் இதனை நுண்ணோக்கியின் உதவியுடன் பரிசோதித்துள்ளனர்.
இந்தப் பாம்பின் சிறப்பியல்பு என்னவென்றால் இதன் உடலில் ஓடும் வெளிர் மஞசள் முதுகுக் கோடுகளும், தலையின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் கண்களும் தான்.
தொலைந்துபோனதாக கூறப்படும் இப் பாம்பு இனம் குருடாக இருப்பதோடு நிலத்துக்கடியில் வாழும். உணவாக எறும்புகள் மற்றும் கரையான்களை உட்கொள்ளும். ஒரேயொரு மெல்லிய முட்டையை மாத்திரம் இடும்.
![]()